விசாரணைக்கு ஆஜரான "நுங்கு புகழ்" டாக்டர் ஷர்மிகா..! நிருபர்கள் சரமாரி கேள்வி! "கூல்" பதில்!
சித்த மருத்துவர் ஷர்மிகா சரணிடம் நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்ப அதற்கு அவர் கூலாக பதில் அளித்துள்ளார்.
சென்னை: சித்த மருத்துவர் ஷர்மிகா சரண் தனது சர்ச்சைக்குரிய பேட்டிகளுக்காக விளக்கமளித்துள்ளார்.
மிக குறுகிய காலத்தில் சமூகவலைதளங்களில் வைரலானவர் டாக்டர் ஷர்மிகா சரண். இவர் சித்த மருத்துவராவார். தனது யூடியூப் சேனல்களில் மக்களுக்கு மருத்துவக் குறிப்புகளை வழங்கி வந்தார்.
எளிமையான இவரது மருத்துவ குறிப்புகளை கேட்ட மக்கள் இவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்து இவர் சொல்லும் குறிப்புகளை கேட்டு வந்தனர். இதனால் மிக குறுகிய காலத்திலேயே ஷர்மிகா பிரபலமடைந்தார்.

யூடியூப் சேனல்கள்
பின்னர் அவரது வீட்டிற்கு பேட்டி எடுப்பதற்காக நிறைய யூடியூப் சேனல்கள் வரிசை கட்டி நின்றன. அந்த யூடியூப் சேனல்களில் இவருடைய திருமண ஆல்பம், இவருடைய ஹோம் டூர், பிரிட்ஜ் டூர், கிச்சன் டூர் என நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர்தான் இவர் பாஜக நிர்வாகி டெய்சி சரணின் மகள் என்பது தெரியவந்தது.

தாய் மகள்
பின்னர் அம்மாவும் மகளும் இணைந்து பேட்டிகளை கொடுத்து வந்தனர். ஷர்மிகா முதலிரவின் போது தூங்கியதையும் அடுத்த நாள் விடிந்து விடியாததுமாக வாக்கிங் எழுந்து போனதையும் டெய்சி காமெடியாக சொல்லி அவரை கலாய்த்தார். இந்த நிகழ்வில் பேஸ்புக், யூடியூப், ஷார்ட், ரீல்ஸ் என எதை திறந்தாலும் டாக்டர் ஷர்மிகாவின் வீடியோக்கள் குழுமிக் கிடந்தன.

பிரபலம்னாலே பிராப்ளம்தான்
பிரபலம்ன்னாலே பிராப்ளம்தான் என்பதற்கேற்ப இவருக்கு இவர் கூறிய வைத்திய குறிப்புகளே பிராப்ளமாக வந்துவிட்டது. ஷர்மிகா தனது பேட்டியில் முடி பராமரிப்பு, உடல் பராமரிப்பு, நகம் பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்களை விளக்கினார். அப்படி ஒரு முறை ஷர்மிகா அளித்த பேட்டியில் ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என்றார்.

ஷாக்
இதை கேட்ட நெட்டிசன்களுக்கு ஷாக்காகிவிட்டது. உலகில் எத்தனையோ பேர் சற்று பூசினாப்புல ஆவதற்காக எதை எதையோ சாப்பிட்டு பார்க்கிறார்கள். ஆனால் அவர்களது உடல் கிராம் கணக்கில் கூட ஏறமாட்டேங்கிது. ஆனால் இவரென்னவோ குலோப் ஜாமூன் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்கிறாரே என ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய்
அடுத்தது குப்புற படுத்தால் மார்பக புற்று நோய் வரும். நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் வளர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்து அடுத்தடுத்த அதிர்ச்சிகளை கொடுத்தார். நுங்கு சாப்பிடுவதால் எப்படி மார்பகம் பெரிதாகும் என்பதறகு ஒரு விளக்கத்தையும் அவர் அளித்தார். அதாவது நுங்கு பார்ப்பதற்கு மார்பகம் மாதிரி இருப்பதால் அதை சாப்பிட்டால் பெரிதாகும் என்றார். அடுத்தது நெட்டிசன்கள் பொங்கி எழுந்ததற்கே காரணம் இந்த பிரச்சினைதான் அதாவது குழந்தையின்மை குறித்த ஷர்மிகாவின் பேச்சுதான்.

குழந்தை பிறப்பு
அதாவது குழந்தை பிறப்பதற்கும் செக்ஸிற்கும் சம்மந்தமே இல்லை. ஒருவரது பாவ புண்ணியத்திற்கேற்ப மட்டுமே குழந்தை பிறப்பு நடக்கிறது. இதற்கு கடவுளின் ஆசியும் தேவைதான் என பேசியிருந்ததுதான் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்படியென்றால் குழந்தை பிறந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றும் குழந்தை இல்லாதவர்கள் பாவம் செய்தவர்கள் என்றும் ஷர்மிகா சொல்கிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பினர்.

டிரோல் செய்யப்பட்ட ஷர்மிகா
இதையடுத்து ஷர்மிகா சமூகவலைதளங்களில் டிரோல் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக வாய்த் தவறி பேசிவிட்டேன் என கூறி ஒரு வீடியோ போட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவ கவுன்சிலுக்கு புகார்கள் வந்ததை அடுத்து ஷர்மிகாவிடம் அவர் பேசிய மருத்துவக் கவுன்சிலுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க இந்திய மருத்துவ இயக்குநரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் உத்தரவிட்டது.

மருத்துவக் கவுன்சிலில் ஆஜராகி விளக்கம்
இதுகுறித்து அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழ்நாட்டு பிரிவு துணை இயக்குநர் பார்த்திபன், ஜனவரி 9ஆம் தேதி வெளியிட்டிருந்தார். அதன்பேரில் ஷர்மிகா அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள இயக்குநரக அலுவலகத்தில் ஜனவரி 24 ஆம் தேதி இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் அந்த விசாரணை நடந்தது.

சித்த மருத்துவர்
சித்த மருத்துவமனை முதல்வர் கனகவள்ளி, மாநில மருந்து ஆய்வாளர் மேனக்ஷா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு ஷர்மிகாவை விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் இதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஷர்மிகா அளிக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இயக்குநரகத்தில் மருத்துவர் ஷர்மிகா தனது வழக்கறிஞர்களுடன் ஆஜராகினார்.

மருத்துவ வல்லுநர்கள்
அப்போது மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது. ஆனால் தற்போது முந்தைய கருத்துகளுக்கு உரிய விளக்கத்தை அளிக்காமல் மீண்டும் கால அவகாசம் கோரியுள்ளார் ஷர்மிகா. கடந்த முறை ஆஜரான போது கேட்கப்பட்ட அதே 3 கேள்விகள்தான் நேற்று மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு ஷர்மிகா வாய்மொழியாகவே விளக்கமளித்தார். இந்த விளக்கம் ஏற்புடையதல்ல எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என குழுவினர் கேட்டுள்ளனர். இதனால் 24 ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கிறேன் என ஷர்மிகா உறுதியளித்துள்ளார்.

ஃபாலோயர்ஸ்கள்
இந்த நிலையில் விசாரணையை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவரை பத்திரிகையாளர்கள் சந்தித்து கேள்விகள் எழுப்பினர். அந்த வகையில் உங்களை இனி மருத்துவம் பார்க்க அனுமதி அளிப்பார்களா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நான் ஒரு டாக்டர் நிச்சயம் அனுமதி அளிப்பார்கள் என்றார். அது போல் நீங்கள் உங்களுடைய ஃபாலோயர்ஸ்களுக்கு சொல்ல விரும்புவது என்ன என கேட்டதற்கு இதுவும் கடந்து போகும் என சொல்ல நினைக்கிறேன் என சிரித்துக் கொண்டே கூறிவிட்டு சென்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications