Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தேனீக்கள் ரீங்காரம்" எழுப்பினால்.. மன அழுத்தம், பிபி, சுகர் குறையும்.. சொல்கிறார் டாக்டர் தீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூளையில் அதிர்வை ஏற்படுத்தி மனதை சாந்தப்படுத்த பிராமரி பிரணாயாமம் செய்வது குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் அதை யாரெல்லாம் செய்யலாம் என்பது குறித்து அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா விளக்கியுள்ளார்.

Recommended Video

    மன அழுத்தம், பிபி, சுகர் குறையும்.. டிப்ஸ் சொல்கிறார் டாக்டர் தீபா

    இதுகுறித்து டாக்டர் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், கொரோனா காலத்தில் நமது மன அழுத்தமானது அதிகமாகவே இருக்கிறது. வாழ்வாதாரம், பொருளாதாரம் என பல சிந்தனைகளில் நாம் இருக்கிறோம். இதனால் மன அழுத்தம் அதிகமாகிறது.

    இந்த நேரங்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சில எளிமையான யோகா பயிற்சிகளை செய்வது நல்லது. இதற்கு மிகவும் முக்கியமானது மூச்சு பயிற்சியாகும். பிராமரி பிரணாயாமம். பிரணாயாமம் (Breathe under control) என்றால் நமது சுவாசத்தை கட்டுக்குள் வைத்திருப்பது என்று அர்த்தம்.

    மேலோட்டம்

    மேலோட்டம்

    மன அழுத்தம் அதிகமாகினால் சுவாசம் நமது கட்டுக்குள் இருக்காது. மேலோட்டமாக மூச்சு இருக்கும். சில பேருக்கு வேகமாக மூச்சு இழுக்கும். இந்த மாதிரியான நேரங்களில் சுவாசத்தில் கவனம் செலுத்தி அதை நமது கட்டுக்குள் கொண்டு வரும் போது நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். பிராமரி பிரணாயாமம் என்பது humming bee சப்தம் கொண்டது. பிராமரி என்றாலே ஹம்மிங் பீ- அதாவது தேனீக்கள் ரீங்காரத்தை எழுப்புவது போல் செய்ய வேண்டும்.

     நைட்ரேட்

    நைட்ரேட்

    இந்த பிரணாயாமத்தை நாம் செய்யும் போது நமது மூளையில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. மூளையில் அதிர்வு ஏற்படும் போது நமது மனஅழுத்தம் மிகவும் எளிமையாக குறைகிறது. நமது மூக்கு பகுதியில் பாராசைனஸ் என்ற கேவிட்டி இருக்கும். அதில் நைட்ரிக் ஆக்ஸைடு இருக்கும். நாம் சுவாசிக்கும்போது அந்த ஆக்ஸிஜன் நைட்ரிக் ஆக்ஸைடுடன் சேர்ந்து நைட்ரேட்டாக மாறுகிறது.

     ஆழ்ந்த தூக்கம்

    ஆழ்ந்த தூக்கம்

    இந்த நைட்ரேட்டானது நமது ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்தப்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் கிருமிகளுக்கு எதிராக கிருமிநாசினியாக செயல்படுவதற்கும் பயன்படுகிறது. இதோடு நமது ரத்த அழுத்தத்தின் அளவையும் சர்க்கரையின் அளவையும் கொழுப்புகளின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கிறது.

     நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    இது எல்லாமே நமது மனதை அமைதிப்படுத்துதல் மூலமாக நடக்கிறது. அதாவது நாம் பதற்றப்படும் போது நம் உடலில் சிம்பதட்டிக் என்ற நரம்பு மண்டலம் அதிக செயல்பாட்டில் இருக்கும். இந்த பிரணாயாமம் நாம் செய்யும் போது அது பாராசிம்பதட்டிக் சிமுலேஷனை கொடுத்து நம் மனதை சாந்தப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

     எத்தனை முறை செய்யலாம்

    எத்தனை முறை செய்யலாம்

    இந்த பிராமரி பிரணாயாமத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் காலை 5 முறையும் மாலை 5 முறையும் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். 5 முதல் 10 முறை கூட இதை செய்யலாம். மேற்கண்ட நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவதுடன் மற்ற நோய்களின் சீற்றத்தையும் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றார் டாக்டர் தீபா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+