சிறுநீரில் புரதம், ரத்தம் வெளியேறுதா? கிட்னி ஃபெயிலியருக்கு முந்தைய ஸ்டேஜ்! ஆனாலும் சிகிச்சை இருக்கு
சிறுநீரில் புரதம் வெளியேறி கிட்னி செயலிழப்புக்கு முந்தைய ஸ்டேஜில் இருந்தவருக்கு இயற்கை முறையில் சிகிச்சை
சென்னை: சிறுநீரில் புரதம் வெளியேறினால் என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பது குறித்தும் இதற்கு இயற்கையான முறையில் எப்படி தீர்வு காணலாம் என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் மருத்துவர் ஒய். தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 22 வயது இளைஞருக்கு சிறுநீரில் புரதம் வெளியேறி கொண்டிருந்தது. கால் வீக்கம் இருந்தது.
அது போல் ரத்தத்திலும் புரதத்தின் அளவு குறைவாகவே இருந்தது. அது போல் சிறுநீரில் ரத்தமும் வெளியேறிக் கொண்டிருந்தது. சிறுநீர் நுரைத்து இருந்தது. அதிக துர்நாற்றம் வீசக் கூடியதாக இருந்தது. அவ்வப்போது அந்த இளைஞர் சோர்வடைந்து விடுவார்.

யோகா மருத்துவமனை
இந்த பிரச்சினைகளுடன் நமது யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் வந்த போது அவருடைய சிறுநீரில் புரதத்தின் அளவு 100 கிராம் இருந்தது. அவருக்கு ஃபேட்டி லிவரும் இருந்தது. இதன் மருத்துவ பெயர் நெஃப்ரோட்டிக் சின்ட்ரோம். சிறுநீரகத்தில் உள்ள கிளாமருலியில் பிரச்சினை இருப்பதுதான் இந்த நெஃப்ரோட்டிக் சின்ட்ரோம் என்பார்கள். சிறுநீரகத்தில் சிறிய ரத்தக் குழாய்கள் இருக்கும். இந்த கிளாமருலியின் மூலம் உடலில் உள்ள கழிவுகள் வடிகட்டப்பட்டு ரத்தத்தில் புரதத்தை சேமித்து வைக்கும். இந்த புரதமானது உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடுகளுக்கு தேவைப்படக் கூடியதாகும். இந்த கிளாமருலி செயல்படாவிட்டால் ரத்தத்தில் புரதத்தை (ஆல்புமின்) வடிகட்டி சேமித்து வைக்காமல் அது சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும்.

சிறுநீரில் வெளியேற்றம்
இந்த புரதம் சிறுநீரில் வெளியேறினால், ரத்தத்தில் இருக்காது. இதனால் உடலில் அப்படியே நீரானது தங்கிவிடும். இதன் காரணமாக அவருக்கு கால் , பாதம், கணுக்காலில் வீக்கம் இருந்தது. இது இப்படியே இருந்தால் நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டியதாக இருக்கும். இந்த நெஃப்ரோட்டிக் சிண்ட்ரோம் மரபு ரீதியாக வர வாய்ப்பிருக்கிறது. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே பாதிக்கும். சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாவிட்டால் அவர்களுக்கு யூரியா, கிரியாட்டினைன் அளவு அதிகமாகவே இருக்கும். இதய பாதிப்பால் கூட இந்த சின்ட்ரோம் வரலாம். அது போல் ரத்த கொதிப்பு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படும். கால்களில் வீக்கம் அதிகமாக இருந்ததாலும் அந்த இளைஞர் சோர்வாக இருந்ததாலும் சில மருத்துவ பரிசோதனைகளை எடுத்து பார்த்து அதில் கண்டறிய முடிந்தது.

என்ன மாதிரியான உணவு
இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுத்தோம் என்பதை சொல்கிறேன். இந்த இளைஞர் கடந்த மாதம் 10ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்தார். அவரை உள்நோயாளியாக அனுமதித்து 31ஆம் தேதி வரை கண்காணித்தோம். புரதத்தை அதிகரிப்பதற்காக அவருக்கு முளைக்கட்டிய பயறுகள், நட்ஸ் கொடுத்தோம். சத்து மாவு உருண்டை கொடுத்தோம். இந்த நோயாளிகளுக்கு நாம் உணவு கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். புரதம் குறைவாக இருப்பதால் புரதச் சத்தை கொடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்கு அதிக புரத உணவை கொடுத்தால் அது சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களை பாதிக்கும். மேலும் சிறுநீரக செயலிழப்பும் ஏற்படும். உப்பு சேர்க்காமல் உணவு கொடுத்தோம்.

என்னென்ன சிகிச்சைகள்
நிற சிகிச்சை மூலம் அவர்களுடைய நாக்கில் வெள்ளை படிந்திருந்தது, நாக்கின் ஓரங்களில் பற்கள் பதிந்திருந்தது. அது போல் கண்களுக்கு கீழ் பகுதியில் நீர் சேர்ந்திருந்தது. முகமும் வெளீர் நிறத்தில் இருந்தது. இவை எல்லாவற்றையும் பார்க்கும் போதே அவர்களுக்கு கிட்னி பாதிப்பு இருந்தது என தெரியவந்தது. கிட்னி பேக், விதை சிகிச்சை, ஆரிக்குலர் தெரபி, காதுகளில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புள்ளிகளை தூண்டிவிடும் சிகிச்சை ஆகிய சிகிச்சைகளை கொடுத்தோம். ஃபேட்டி லிவர் இருந்ததால் அவர்களுக்கு கீழாநெல்லியை உணவில் சேர்த்தோம். இந்த இலையை கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தார்.

மெரிடியன் மசாஜ்
இதனுடன் மெரிடியன் மசாஜ், அக்குபஞ்சர், மசாஜ் சிகிச்சை, பாதங்களுக்கான சிகிச்சை, ரிஃபெலக்ஸாலஜி, இடுப்பு குளியல், முதுகுதண்டு ஸ்ப்ரே சிகிச்சையும் கொடுத்து வந்தோம். இதனால் 7 நாட்களிலேயே நல்லதொரு மாற்றம் தெரிந்தது. சிறுநீரில் குறைந்த அளவு நுரை வெளியேறியது. முகம், நாக்கு, கண்களில் மாற்றங்கள் இருந்தன. ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுநீரில் 100 கிராம் புரதம் வெளியேறிய நிலையில் சிகிச்சைக்கு பிறகு 50 ஆக குறைந்தது. ரத்தத்தின் கசிவும் 1 கிராம் டபுள் பிளஸ் இருந்தது, சிகிச்சைக்கு பிறகு 0.5 கிராம் சிங்கிள் பிளஸானது. பிலிருபின் அளவும் இயல்பு நிலைக்கு வந்தது. ஃபேட்டி லிவரிலும் நிறைய மாற்றங்கள் இருந்தன. இதில் விட்டமின் டி மிகவும் முக்கியமானது. வாரத்திற்கு இரு நாட்கள் மண் குளியல், நீராவி குளியல், வாழை இலை குளியல் கொடுத்தோம். விட்டமின் டி குறைபாடு இருந்தால் சிறுநீரகத்தில் கால்சியம், பாஸ்பேட் ஆகியவற்றை வடிகட்டாமல் அப்படியே வைத்துவிடும். இதனால் கல்லீரலில் பிரச்சினை ஏற்படும். தற்போது அந்த இளைஞரை வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்துவிட்டோம். அவ்வப்போது புறநோயாளியாக வர சொல்லியிருக்கிறோம். மேற்கொண்டு தொடர்ந்து சிகிச்சை கொடுத்தால் அவர்களின் நோய் குறைய வாய்ப்பிருக்கிறது. நெஃப்ரோட்டிக் சின்ட்ரோம் இருப்போர் ஒரு நாளைக்கு ஒரு கிராம் மட்டுமே புரதம் எடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெய், பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் தீபா தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications