SIR பணிக்கு பிறகு.. புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. 85 ஆயிரம் பேர் நீக்கம்!
புதுவை: SIR பணிக்கு பிறகு புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதில் புதுவையில் 7.66 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85,530 வாக்காளர்கள் (10 சதவீதம்) நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது.
இதனையொட்டி தேர்தல் ஆணையம் மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர்) மேற்கொண்டது. ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்துள்ள பீகாரிலும் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புகள் தெரிவித்தன. எனினும் தேர்தல் முடிந்து அங்கு நிதிஷ் குமார் தலைமையிலான எண்டிஏ கூட்டணி ஆட்சியை பிடித்தது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடந்த மாதம் 4 ஆம் தேதி இந்த பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வந்தது. வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று பூர்த்தி செய்து வந்தனர்.
பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இன்று சில மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், கோவா, ராஜஸ்தான், புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் புதுவையில் மட்டும் 7.66 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85,530 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது 10 சதவீதம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளன. பெயர் விடுபட்ட வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர், போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏதுவாக பார்ம் வழங்கப்படும். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications