"ஏற்கனவே ஒன்னு.. நான் எதற்கு.." ஆவேசப்பட்ட அசினா.. ஷாக் கொடுத்த ஷாஜஹான்.. தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில், முதல் மனைவியின் வீட்டிற்கு செல்வதை கண்டித்த இரண்டாவது மனைவியை கொலை செய்விட்டு, கரண்ட் ஷாக்கில் உயிரிழந்தது போல் நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் தோட்டம் ஆறாவது தெருவை சேர்ந்த ஷாஜகான் என்பவர், தோல் ஆடைகளை கொண்டு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, ஜெபினா என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுடன் காத்பாடா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வந்த அசினா பேகம் என்பவருக்கும், ஷாஜகானுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு காதலாக மாறி, இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2-வது திருமணம் செய்துகொண்ட ஷாஜகான், வண்ணாரப்பேட்டையில் நைனியப்பன் தோட்டம் பகுதியில் மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

2-வது மனைவி தொந்தரவாம்..
இந்நிலையில், அசினா பேகத்திற்கு குழந்தை இல்லாத நிலையில், ஷாஜகான், தனது முதல் மனைவியான ஜெபினாவை மட்டுமே நல்ல முறையில் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், 2-வது மனைவி அசினா பேகத்திற்கும், ஷாஜகானுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது வீட்டிற்கு வரச் சொல்லி அசினா பேகம், ஷாஜகானை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். மேலும், வீட்டு செலவிற்காக பணம் கேட்டும் அவர் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இதனால் பல நாட்கள், இருவருக்கும் இடையே சண்டை நடந்து வந்துள்ளது.

மனைவி கொலை
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி, தனது இரண்டாவது மனைவியான அசினா பேகத்தின் வீட்டிற்கு ஷாஜகான் வந்துள்ளார். அப்போது வழக்கம்போல் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷாஜகான், தலையணை வைத்து முகத்தில் அமுக்கி, அசினா பேகத்தை கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராதபடி, சால்ட்ரிங் செய்யும் இயந்திரத்தை வைத்து, அசினா பேகத்தின் கையில் ஷாக் அடித்தது போன்று செட்டப் செய்துள்ளார்.

நாடகமாடிய கணவர்
பின்னர், ஒன்றும் தெரியாதுபோல், தனது மனைவி அசினா பேகத்தின் தயார் வீட்டிற்குச் சென்று, உங்கள் மகள் கரண்ட் ஷாக் அடித்து உயிரிழந்து விட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். மேலும், தனது உறவினர் வீடுகளுக்கும், போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் ஷாஜகான் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், அசினா பேகத்தின் உடலை கைப்பற்றி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காவல் நிலையத்தில் புகார்
இதனிடையே, அசினா பேகத்தின் தாயார் ஷாபிரா பேகம், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், கணவர் ஷாஜகானிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, ஷாஜகானை தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபடுத்தினர்.

நாடகம் அம்பலம்
போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தனது 2-வது மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல், தலையணை வைத்து முகத்தில் அழுத்தி கொன்றதாகவும், இந்த கொலை தொடர்பாக யாரும் தன் மீது சந்தேகப்படாமல் இருக்கும் வகையில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துபோல் இருக்கும் வகையில் செட்டப் செய்து, நாடகமாடியதையும் ஷாஜகான் ஒப்புக்கொண்டார்.

சிறையில் அடைப்பு
இதனையடுத்து, மனைவியை கொன்று, கரண்ட் ஷாக்கில் உயிரிழந்தது போல் நாடகமாடிய கணவர் ஷாஜகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தர். பின்னர், அவரை வண்ணாரப்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். முதல் மனைவியின் வீட்டிற்கு செல்வதை கண்டித்த இரண்டாவது மனைவியை, கொலை செய்விட்டு, கரண்ட் ஷாக்கில் உயிரிழந்தது போல் நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்த சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications