குடியரசுத் தலைவர் தேர்தல் 2022: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் திரௌபதி முர்மு! என்ன செய்ய போகிறார்?
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தமிழிசை சவுந்திரராஜன், வெங்கைய நாயுடு உள்ளிட்டோர் மற்ற கட்சிகளுடன் இணக்கமான போக்கை கொண்டுள்ளார்கள்.

வேட்பாளர்
இதனால் அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர கூடும் என பாஜக கருதுவாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பாஜகவோ பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவுக்கு வாய்ப்பை கொடுத்தது. கடந்த முறை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்
திரௌபதி முர்முவுக்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பாமக தமாக, பகுஜன் சமாஜ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அது போல் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தியுள்ளனர்.

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்தவர். பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவால் ஓரங்கட்டப்பட்டவர்களில் யஷ்வந்தும் ஒருவர். இவர் பிரதமர் மோடிக்கு போன் போட்டு தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவருக்கு திமுகவும் ஆதரவு கொடுத்துள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி
இந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பயணம் செய்து தனக்கு ஆதரவு கோர முர்மு திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான 14 பேர் கொண்ட குழு செய்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திட்ட முர்மு திட்டமிட்டுள்ளார்.
Recommended Video

முதல்வர் ஸ்டாலின்
ஜூலை முதல் வாரத்தில் சென்னை வர திட்டமிட்டுள்ள முர்மு, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவு அளிக்குமாறு கோரவுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர். சமூகநீதி என்கிறீர்களே திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தாருங்கள் என தமிழக பாஜக மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் திமுக, யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு என கூறிவிட்ட நிலையில் முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா இல்லை மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது நிலைப்பாட்டை எடுத்துரைப்பாரா என்பது போக போகத் தான் தெரியும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications