சர்.பிட்டி தியாகராயர் 172-வது பிறந்த நாள்- எழுச்சியை ஏற்படுத்திய தனித் தலைவர்.. கி.வீரமணி புகழாரம்
சென்னை: நீதிக்கட்சியை உருவாக்கிய சர்.பிட்டி தியாகராயர் 172-வது பிறந்த நாளில் பார்ப்பனர் அல்லாத மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்திய தனித் தலைவர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: "நீதிக்கட்சி" என்று வெகு மக்களால் அழைக்கப்பட்ட திராவிடர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களில் முக்கியமானவர் சர். பிட்டி. தியாகராயர் அவர்கள் ஆவார். அவரது 172ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று!
திராவிடத் தலைவர்களான தியாகராயரும், டி.எம். நாயரும், டாக்டர் சி. நடேசனாரும் இட்ட வித்து இன்றும் ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, எங்கும் தழைத்து அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது தலைமையில் ஒப்பற்ற 'திராவிட மாடல்' ஆட்சியாக செழித்து வளர்ந்தோங்கி நிற்கிறது!

இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழுகிறது! 'விடுதலை' நாளேடு துவக்கப்பட்ட அந்நாளில் ஓர் அருமையான தலையங்கத்தின் தலைப்பு 'ராயர் - நாயர் சகாப்தம்' என்பதாகும்! அவ்விரு பெரும் சிற்பிகளும், டாக்டர் சி. நடேசனாரும் பதவிக்குப் போகாமலே ஆட்சி செய்த அற்புதத்தை உருவாக்கிய தன்னலமற்ற தகைமைசால் தலைவர்கள் அன்றோ! அவர்களது கொள்கைகள் அந்நாளின் பிரதமர் பனகால் அரசர்மூலம் - ஆட்சி பீடத்தில் அமர்ந்தனவே!
பதவிக்கு ஆலாய்ப் பறக்கும் பாழும் அரசியல் களத்தில், வந்த பிரதமர் (முதல்வர் பதவியை) வேண்டாமென மறுத்து, தன் கட்சிக்காரர் கடலூர் சுப்பராயலு ரெட்டியாரை அமர வைத்த பெரு உள்ளத்தவர் வெள்ளுடைவேந்தர் தியாகராயர் அல்லவா!
வெள்ளைகாரக் கவர்னர் வேல்ஸ் இளவரசரான ஆல்பர்ட் எட்வேர்ட்டை வரவேற்க தன் உடை, நடையை மாற்றாத 'சுயமரியாதை வீரர்' நமது 'ராயர் பெருமான்!' (12.1.1922)
1916லேயே - நூறாண்டுக்கு முன்பே பார்ப்பன ஆதிக்கத்தின் முகமூடியைப் பிய்த்தெறிந்து சமூகநீதிக் கொடியை இந்த மண்ணில் பறக்கச் செய்தவர்! பள்ளியின் மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி! எல்லாவற்றையும் தாண்டிய மனிதநேயத்தின் மகத்தான பேருருவம்!
அவர் படத்திற்கு - சிலைக்கு மாலை அணிவித்தால் மட்டும் போதாது; அவர் காண விரும்பிய சமத்துவ, சமூகநீதி - ஆளுமை மிகுந்த அனைவருக்கும் அனைத்தும் கிட்டச் செய்வதே நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். 1919இல் காங்கிரசில் சேர்ந்து 1925இல் அதன் பார்ப்பன இன ஆதிக்கத்தைக் கண்டுணர்ந்த தந்தை பெரியார் பிற்காலத்தில் வருந்திக் கூறிய நெஞ்சைத்தொடும் வார்த்தைகள் என்ன தெரியுமா?
"பார்ப்பனரல்லாத திராவிட மக்களின் நலனைப் பாதுகாக்க வந்த ஜஸ்டிஸ் கட்சியை சில காலம் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்கு "பிராயச் சித்தமாகவே" நான் இத்தனைக் காலமும் உழைத்து என் "பழியைத்" துடைத்துக் கொள்கிறேன்" என்று நெஞ்சுருகக் குறிப்பிட்டாரே தந்தை பெரியார். அதைவிட "ராயர் - நாயர்" சகாப்தப் பெருமைக்கும், தேவைக்கும் சரித்திரச் சான்று வேறு என்ன வேண்டும்? வாழ்க தியாகராயர் பெருமான் தொண்டு! வருக அவர் காண விரும்பிய புதுமைச் சமூகம்! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications