எச்சில் இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணத்துக்கு அனுமதி- உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தி.க. எதிர்ப்பு!
சென்னை: கரூரில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு ஒன்று, நாம் 2024 ஆம் ஆண்டில்தான் வாழுகிறோமா என்ற அய்யப்பாட்டை எழுப்பியுள்ளது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரமேந்திரரின் ஜீவ சமாதி (அது ஒரு கோவிலா என்பதே கேள்விக்குறி) இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் நடைபெறுகிறது.

அந்நாளில் பார்ப்பன பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது நேர்த்திக் கடன் என்ற பெயரில் அங்கப்பிரதட்சணம் நடைபெற்று வந்தது. பக்தியின் பெயரால் நடைபெறும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் 2015 இல் தடை செய்யப்பட்டது. எச்சில் இலைகளின்மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி கரூர் நவீன்குமார் என்பவர் மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அவரின் தீர்ப்புப் பின்வருமாறு: ''முக்கிய துறவிகளில் ஒருவரான சதாசிவ பிரமேந்திரரின் பக்தர்கள், அவரின் ஜீவ சமாதி நாளில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சாப்பிட்ட வாழை இலைகள்மீது அங்கப்பிரதட்சணம் செய்வது 120 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பழைமையான சடங்காகும். (இதுவே கேள்விக்குரியதாகும்). 2015 இல் நிறுத்தப்பட்ட இந்தச் சடங்கு மீண்டும் நடத்தப்பட அனுமதி கேட்டு, மனுதாரர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்; பதில் இல்லை. அனைத்துத் தரப்பு இந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை இது.
மத நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் அடிப்படை உரிமையில் வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. மனுதாரர் ஒரு ஹிந்து; நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி ஆண்டு முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. அவர் ஒரு சித்த புருஷர்.ஜீவ சமாதி தினத்தன்று பக்தர்கள் உணவு உண்ட வாழை இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பாரம்பரிய வழக்கம் இருந்தது. இது ஆன்மிக பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மகாபாரத காலத்தில்கூட சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது ஆன்மிகப் பலனாகக் கருதப்பட்டது. கிராமங்களில் மத நிகழ்வுகளை நடத்த அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ஒலி பெருக்கிகள் பயன்படுத்த விரும்பினால் மட்டுமே அனுமதி பெறவேண்டும். இவ்வழக்கில் அதிகாரிகள் அனுமதி வழங்குவது குறித்த கேள்வி எழவில்லை. விருந்தினர்கள் உணவு உட்கொண்ட பின் வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடிப்படை உரிமையை மனுதாரர் நன்றாகப் பயன்படுத்த முடியும். இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.
மனுதாரர் அல்லது எந்தவொரு பக்தரோ தனது அடிப்படை உரிமையை பயன்படுத்துவதை எந்தத் தனி நபராலும் தடுக்க முடியாது. ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மனுதாரரின் அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கும், இடையூறு செய்பவர்களை சம்பவ இடத்திலிருந்து அகற்றுவதற்கும் உதவுவது போலீசாரின் கடமையாகும்'' என்று நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் இதே மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு தலித் பாண்டியன் என்பவரின் மனுவின்மீது (மனு எண்: 7068/2015) எச்சில் இலைகள்மீது அங்கப்பிரதட்சணம் செய்வதற்குத் தடை விதித்து விட்டது - அதைக்கூட மறைத்து - ஆத்திரத்தில் இப்படி ஒரு உத்தரவா?
இப்பொழுது அதே மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி - மத விடயத்தில் தலையிட முடியாது - அது அடிப்படை உரிமை என்று கூறி, சாப்பிட்ட எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் செய்ய உரிமையுண்டு - யாரும் தடுக்க முடியாது - அப்படித் தடுத்தால் காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று உத்தரவிடுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?
அதுமட்டுமல்ல; கருநாடகாவில் குக்கே சுப்ரமண்யா கோவில் உள்பட பல கோவில்களில் மட்டை ஸ்நானம் என்ற எச்சில் இலைமீது நடத்தப்பட்டு வந்த அங்கப்பிரதட்சணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன், பானுமதி ஆகியோர் வழங்கிய தீர்ப்பு கவனிக்கத்தக்கது.
''இது பழங்கால வழக்கம்; எனவே, தடை விதிக்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் வாதாடுகிறது. 500 ஆண்டுகால வழக்கம் என்பதால், அதைப் பின்பற்ற அனுமதிக்க முடியாது. தீண்டாமை கூட பழங்கால வழக்கம்தான் என்பதால், அதையும் அனுமதிக்க முடியுமா? எனவே, 'மட்டை ஸ்நானம்' என்ற எச்சில் இலையில் உருளும் அங்கப்பிரதட்சணத்தை அனுமதிக்க முடியாது. கருநாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது'' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். ('தி இந்து', 13.12.2014).
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி - எச்சில் இலைமீது உருளுவது மத அடிப்படை உரிமை - அதைத் தடுக்க முடியாது என்று உத்தரவுப் பிறப்பிப்பது சட்டப்படி குற்றச் செயல் அல்லவா! உச்சநீதிமன்றத்தைவிட தனக்கு அதிக அதிகாரம் உண்டு என்று நினைக்கிறாரா இந்த நீதிபதி? இவ்வாறு கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications