Dream11: ட்ரீம் 11-க்கு வச்சாச்சு செக்! மத்திய அரசின் செயலால் கடையை இழுத்து மூட ரெடியான நிறுவனம்
சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள நிலையில், ட்ரீம் 11 (Dream11) நிறுவனம் தனது தளத்தில் பணம் செலுத்தி விளையாடும் போட்டிகளை முற்றிலுமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரீம் 11 நிறுவனம்தான் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக உள்ளது.
இந்தியாவில் ட்ரீம் லெவன் எனப்படும் ஆன்லைன் fantasy கேமிங், இந்தியாவில் ஏகபட்சமாக பிரபலமாக உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் செல்போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக மாறிப்போன ட்ரீம் 11-ஐ, கிரிக்கெட் தெரியாதவர்கள் கூட பதிவிறக்கம் செய்து, தங்கள் கனவு அணியை உருவாக்கி, தங்களுக்கு முதல் பரிசு கிடைக்குமா என காத்திருப்பதை பார்க்க முடியும்.

ட்ரீம் 11 செயலி
ஐபிஎல் போன்ற பெரிய கிரிக்கெட் லீக் ஆரம்பித்துவிட்டால், கிரிக்கெட் பார்ப்பதை விட, தாங்கள் தேர்வு செய்து பந்தயம் கட்டிய அணி முதலிடத்தில் வருகிறதா என்று மொபைலையே பார்ப்பவர்கள்தான் அதிகம்.
ட்ரீம் 11 செயலியில் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போட்டிகளில் பயனர்கள் பங்கேற்க முடியும். அதாவது, கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், அன்றைய தினம் எந்த வீரர்கள் அணியில் இடம்பெற்று நன்றாக விளையாடுவார்கள் என்பதை நாம் தேர்வு செய்ய வேண்டும். இரு அணிகளையும் சேர்த்து 11 வீரரை எடுக்க வேண்டும். அதில் ஒரு கேப்டன் மற்றும் துணைக் கேப்டனையும் தேர்வு செய்து அணியை அமைக்க வேண்டும்.
பல கோடி பரிசாக கிடைக்கும்
பந்தயத்தில் பங்கேற்க ரூ.10 முதல் பல ஆயிரம் தொகை நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இதில் முதல் பரிசாக கோடிக்கணக்கில் வழங்கப்படுகிறது. அதாவது, லாட்டரியை வாங்கிவிட்டு அதிர்ஷ்ட எண் நம் கையில் இருப்பது அடித்துவிடுமா என ஏங்கி இருப்பதை போல, போட்டி முடியும் வரை தேர்வு செய்துள்ள வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்களா என பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
தேர்வு செய்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடினால், அதிக புள்ளிகளுடன் பந்தயத்தில் முதலிடம் கிடைக்கும். இதனால் பல கோடி பரிசாக கிடைக்கும். எனவே, கிரிக்கெட் மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த ட்ரீம் 11-ஐ விளையாடுவதை பார்க்க முடிகிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
இது ஒரு வகையான சூதாட்டம் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மத்திய அரசு வைத்த 'செக்' மூலம் இந்த நிறுவனம் மூடுவதற்குத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நாடாளுமன்றத்தில் நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.
லோக்சபாவில் இந்த மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், இப்போது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிய பிறகு, இந்த மசோதா சட்டமாகும்.
ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களுக்கு விளக்கம்
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஆன்லைன் கேமிங் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும். இதன் காரணமாக, ட்ரீம் 11 நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்துவதற்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக ட்ரீம் 11 நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ட்ரீம் 11 நிறுவனத்தின் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், ரியல் மணி கேமிங் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, ஸ்போர்ட்ஸ் கோட், ஃபேன் கோட் போன்ற செயலிகள் மூலம் வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்தத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications