ஆண்களே.. உங்கள் கனவில் தேவதைகள் வந்தால் என்ன பலன்? கனவு சாஸ்திரம் சொல்வது என்ன?
சென்னை: கனவு காண்பது பலருக்கும் பிடித்தமானது. சிலருக்கு நல்ல கனவுகள் அதிகம் வரும் சிலருக்கு வரும் கனவுகள் பயப்பட வைக்கும். அழகான தேவதையை நான் கனவில் பார்த்தேன் என்று நண்பர்களிடம் கூறி சந்தோஷப்படுகிறீர்களா? அப்படி ஒரு கனவு வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
திருமணமாகாத ஆண்களுக்கு மனதிற்கு பிடித்த சினிமா நடிகைகள் கனவில் அடிக்கடி வருவார்கள். திருமணமான ஆண்களுக்கு மனைவியைத் தவிர மற்ற எல்லோரும் கனவில் வருவார்கள். அப்படி கனவில் வந்ததை மனைவியிடம் கூறினால் கரண்டியாலோ, பூரிக்கட்டையாலோ நிச்சயம் அடி விழும். அது உறுதி. எந்த கனவு கண்டால் என்ன பலன் என்று கனவு சாஸ்திர புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

அழகு இல்லாத பெண் ஒருத்தியை, திருமணமாகாத ஒரு ஆண் கனவில் காணும் பட்சத்தில் அச்சப்பட வேண்டாம். அழகான பெண் ஒருவரை நீங்கள் வெகு விரைவில் சந்திக்கப்போகிறீர்கள் என்று அர்த்தம்.
சுமங்கலி பெண் உங்கள் வீட்டிற்கு வருவது போல கனவு கண்டால் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என அர்த்தம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறப்போகிறது என்று அர்த்தம். மிகுந்த பொருள் வரவு உண்டு. திருமணமான பெண் தன்னுடைய கணவனுடன் பயணம் செய்வது போல கனவு கண்டால் உங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்தில் புது வரவு வரப்போகிறது என அர்த்தம்.
சிவப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்ட புடவை அணிந்த பெண்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என அர்த்தம். வெள்ளை உடை அணிந்த பெண்ணை உங்கள் கனவில் கண்டால் நீங்கள் சந்தோசமாகவும் உங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
உங்கள் கனவில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு நகையை பரிசளிப்பது போல கனவு கண்டால் திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கப்போகிறீர்கள் என்று அர்த்தம். ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரப்போகிறது அதன் மூலம் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் ஏற்படப்போகிறது என்று அர்த்தமாகும்.
அப்ஸ்ரஸ் எனப்படும் தேவலோகப் பெண்கள் ஆண்களின் கனவில் வந்தால் திடீர் திருப்பங்கள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம். உங்கள் கனவில் தேவதைகளை அடிக்கடி கண்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருப்பீர்கள் என அர்த்தம். எதிர்பாராத நன்மைகள் அவர்களுக்கு உண்டாகும். திருமணமாகாத பெண்களின் கனவில் தேவதைகள் வந்தால் விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நிகழும்.
பெண்கள் அதிகம் நிறைந்த ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும். பெண்கள் காலில் தங்கக்கொலுசு அணிவது போல கனவு வந்தால் சுப செய்திகள் தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.
ஒரு பெண் மங்கள பொருட்களுடன் உங்கள் வீட்டிற்குள் நுழைவது போல கனவு கண்டால் அந்த குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெறும் என்பதை உணர்த்துகிறது. ஒரு பெண் உங்களை நோக்கி வருவதை போல கனவு வந்தால் உங்களுக்கு தனலாபம் வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
மனதிற்கு பிடித்த பெண்ணை ஆடையில்லாமல் கனவில் கண்டால் அதிர்ஷ்டம் உங்களை விட்டு போகப்போகிறது என்று அர்த்தம். பெண்ணிற்கு முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால் ஏதோ சிக்கல் வரப்போகிறது என்று அர்த்தம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications