குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு!
சென்னை: 20 லிட்டர் கேன் விலை 5 ரூபாயும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 3 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும் உயர்த்தப்படுவதாக தமிழக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம், உலகளாவிய பொருளாதாரத்தில் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. குறிப்பாக பெட்ரோலியம் சார்ந்த உற்பத்திகளில் ஒன்றான பிளாஸ்டிக் துறையில் விலை ஏற்றம் தீவிரமடைந்துள்ளது.

போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தைகளில் ஏற்பட்டு வரும் தாக்கத்தை தொடர்ந்து பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக நேற்று பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்தன. எல்.பி.ஜி சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்ச உணர்விலே உள்ள மக்களுக்கு அடுத்து எந்த பொருட்களின் விலை உயருமோ என்ற பீதியும் நிலவுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வரும் நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் மினரல் குடிநீர் பாட்டில் விலை ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 20 லிட்டர் மினரல் வாட்டர் கேனின் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சுத்திகரித்து, முறையாக அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக தண்ணீர் நிரப்பி விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு இந்த உயர்வு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 1,840 அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த புதிய விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன. கடந்த 15 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், "20 ஆண்டுகளாக அனைத்து சூழலையும் சமாளித்து விலையை ஏற்றாமல் தாக்குப்பிடித்தோம். தற்போது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் குடிநீர் கேன் விலை ஏற்றப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.
-
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'!











Click it and Unblock the Notifications