சென்னை கோடம்பாக்கம் அருகே சாலையில் நிலைத் தடுமாறி விழுந்த முதியவர் மரணம்.. சிசிடிவி வீடியோ
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கார் ஓட்டுநர் நரசிம்மன் சாலையில் நடந்து சென்ற போது நிலைத் தடுமாறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோடம்பாக்கத்தில் கார் ஓட்டுநராக உள்ளவர் நரசிம்மன். இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருக்கு கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்ற போது பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. எனினும் அவர் சாக்கடையில் விழுந்து இறக்கவில்லை என மாநகராட்சி மறுப்பு தெரிவித்தது.

சிசிடிவி காட்சிகள்
இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நரசிம்மன் மேற்கண்ட சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோடம்பாக்கம்
அதில் நரசிம்மன் கோடம்பாக்கம் மேம்பாலத்தையொட்டியுள்ள சர்வீஸ் சாலையில் ஜாக்கிரதையாக நடந்து வருகிறார். அப்போது அங்கு தண்ணீர் தேங்கியிருந்ததால் தண்ணீர் இல்லாத இடங்களில் கால் வைத்து நடந்து கொண்டிருந்தார்.

மாரடைப்பு
அப்போது திடீரென சாலையில் நிலைத்தடுமாறி விழுகிறார். உடனே பின்னால் வந்து கொண்டிருந்தவர் அவரை தூக்க முயற்சிக்கிறார். ஆனால் அவர் இறந்துவிட்டார். இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அவர் சாலையில் இடறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

பிரேத பரிசோதனை
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னரே நடந்தது என்ன என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications