பிரேக்கிற்கு பதில் ஆக்சிலரேட்டரை மிதித்து விபத்து! ஒரு மாதம் கழித்து சென்னை ரயில் ஓட்டுநர் சஸ்பெண்ட்
சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தின் நடைமேடையில் மின்சார ரயில் ஏறி விபத்துக்குள்ளானது ஓட்டுநரின் தவறால் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் சென்னை ரயில்வே பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தாம்பரம் நோக்கி செல்ல வேண்டிய அந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது.

ரயில் விபத்து
இதனால் உஷாரான ரயில் ஓட்டுநர் நடைமேடையில் இருந்த பயணிகளை ஒதுங்குமாறு கூச்சலிட்டபடி சென்றார். ஒரு கட்டத்தில் ரயில் நிலைய நடைமேடையின் மீது மோதிய மின்சார ரயில் அதில் ஏறி சென்று ஒரு கடையின் சுவற்றின் மீது மோதி ரயில் நின்றது. இதனால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.

பெரும் அசம்பாவீதம் தவிர்ப்பு
இதில் ரயில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விடுமுறை நாளானன்று குறைவான மக்கள் கூட்டமே இருந்ததால் பெரும் அசம்பாவீதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
முதல் கட்ட விசாரணையில் ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான ரயிலின் முன் பகுதி இந்த விபத்து சேதமடைந்தது. வேறு யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவித்த ரயில்வே போலீசார் இதுகுறித்து ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

ரயில் ஓட்டுநர் பணியிடை நீக்கம்
இந்த விபத்து தொடர்பாக தொழில்நுட்பக்குழுவினர் உதவியுடன் ஒரு மாதமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. விசாரணையின் முடிவில் விபத்துக்கு ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்பது உறுதியானது. பிரேக் பிடிக்காத ரயிலை தொடர்ந்து ஓட்டுநர் இயக்கியதே காரணம் என்பது விசாரணையில் உறுதியானதை அடுத்து ரயில் ஓட்டுநர் பவித்ரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications