தமிழகத்தின் முக்கியமான 5 ஐஏஏஸ் அதிகாரிகளை மன்னிப்பு கேட்க வைத்த டிரைவர்கள்.. வழக்கில் புதிய உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமானிய டிரைவர்கள் ஒருவர் வழக்கு தொடர்ந்து, தமிழ்நாட்டின் டாப் ஐஏஏஸ் ஐந்து அதிகாரிகளை நீதிமன்ற படியேற வைத்தார். மேலும் அந்த வழக்கில் அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டனர். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், முதியோர் இல்லம் அல்லது ஆதரற்றோர் இல்லத்துக்கு சென்று அங்கு தங்கியிருப்போருடன் சிறிது நேரத்தை செலவழித்து அவர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்று 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நூதன உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது
சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமானிய டிரைவர்கள் தொடர்ந்த வழக்கில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. என்ன வழக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம். சென்னை ஐகோர்டில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக சின்னதம்பி, எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

டிரைவர்கள்
அவர்கள் தங்கள் மனுவில் கூறுகையில், "தற்காலிக டிரைவர்களாக பணியில் சேர்ந்த எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை இதுவரை அரசு அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.
ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள்
எனவே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் துறை கமிஷனர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்துறை செயலாளர் ராஜாராமன், வேலூர் மாவட்ட கலெக்டர் பி.குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் டி.பாஸ்கர பாண்டியன் ஆகிய 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.
பணம் இழப்பீடு
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் (அண்மையில் ஆந்திரா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்) விசாரித்தார். அப்போது, 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் நேரில் ஆஜராகி, இந்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி விட்டோம். அதேநேரம், உத்தரவை அமல்படுத்த சிறிது காலதாமதம் ஆகி விட்டது என்று தெரிவித்தனர். ஆனால், மனுதாரர்கள் பணி நிரந்தரத்தை 3 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதாக செய்ததால், பண இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் நீதிபதி, மனுதாரர்களுக்கு 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6.25 லட்சத்தை வழங்கவேண்டும் என்று கருத்து கூறினார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு
ஆனால், அதிகாரிகள் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், "இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பது என்பது அதிகாரிகளுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நீதிபதியிடம் கூறினார். தொடர்ந்து வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி கடந்த 22-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "இந்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அமல்படுத்தவில்லை. எனவே, இந்த 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும், எதிர்காலத்தில் காலதாமதம் இல்லாமல் ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்துவோம் என்றும் உத்தரவாதம் அளித்தும் பிரமாண மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
முதியோர் இல்லம்
எனவே அவர்கள் கோரும் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன். 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் இல்லதுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுக்கு செய்த சேவை குறித்து, பிரமாண மனுவை உயர்நீதிமன்றத்தின் ஜூடிசியல் பதிவாளரிடம் தாக்கல் செய்யவேண்டும்.
ஒருவேளை இந்த உத்தரவாதத்தை 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அமல்படுத்தவில்லை என்றால், அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட் மீண்டும் விசாரணைக்கு எடுக்கவேண்டும்" இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications