மோசம்.. புடின் மீதே கைவைக்க பார்க்கிறீங்களா? நான் கோபமா இருக்கேன்.. உக்ரைன் மீது பாய்ந்த டிரம்ப்!
சென்னை: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை கடுமையாக கண்டித்து உள்ளார். தான் மிகவும் கோபமாக இருந்ததாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி உள்ளார். 91 ட்ரோன்கள் மூலம் புதினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் மாஸ்கோவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை மாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதே சமயம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
டிரம்ப் கண்டனம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புளோரிடாவின் மார்-அ-லாகோ விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அதிகாலையில் புடின் தாக்குதல் குறித்துத் தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார். "தாக்குதல் நடக்கவில்லை என்று உக்ரைன் தரப்பு கூறுகிறது . அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ரஷ்யா தாக்குதல் நடந்ததாக கூறுகிறது. புடின் இன்று காலை என்னிடம் போன் செய்து தாக்குதல் நடந்ததாகக் கூறினார். அதனால் நான் கோபமடைந்தேன்," என்றார் டிரம்ப்.
ஒரு நாட்டின் தலைவரின் வசிப்பிடத்தைத் தாக்குவது தவறு, இது சரியான நேரம் அல்ல. எனினும், சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதை மீறி தாக்குதல் நடந்து இருந்தால் அது மிகவும் மோசமான விஷயம், என்று டிரம்ப் கோபமாக குறிப்பிட்டு உள்ளார்.
புடின் வீட்டின் மீது தாக்குதல் பின்னணி
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், டிசம்பர் 28 மற்றும் 29 அன்று மாஸ்கோவின் மேற்கில் உள்ள நோவ்கோரோட் பிராந்தியத்தில் புடினின் வசிப்பிடத்தை நீண்ட தூர ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். மொத்தம் 91 ட்ரோன்கள் ஏவப்பட்ட போதிலும், அனைத்தும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டன. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி இந்தக் குற்றச்சாட்டை ரஷ்ய நாட்டின் மற்றொரு பொய் என்று கூறி முற்றிலும் நிராகரித்தார்.
ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளில் உண்மையும் இல்லை என உக்ரைன் தெரிவித்தது. ரஷ்ய அதிகாரிகளின் அறிக்கையின்படி, அமெரிக்காவிடம் இருந்து மேம்பட்ட ஆயுதங்கள் கிடைத்திருந்தால் உக்ரைன் இதைச் செய்திருக்காது. அமெரிக்கா ஆயுதம் கொடுக்கவில்லை. போரில் தோல்வி அடையும் சூழலில் உக்ரைன் உள்ளது. இதனால் வேறு வழியின்றி உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்று கூறி உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பின் டிரம்ப் போனில் புடின் உடன் பேசி உள்ளார். நேற்றுதான் உக்ரைன் போர் பற்றி இருவரும் பேசி உள்ளனர். 24 மணி நேரத்தில் இரண்டு பேரும்.. மீண்டும் போனில் பேசிய சம்பவம் சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications