கிருஷ்ணாவை சந்திக்க வாய்ப்பு இருக்கா? புழல் சிறை அதிகாரிகளிடம் நடிகர் ஸ்ரீகாந்த் கேட்ட கேள்வி
சென்னை: கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில் அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் தனித்தனி சிறையில் இருவரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே செய்தித் தாள் படித்ததன் மூலம் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி அறிந்து, கிருஷ்ணா எங்கே இருக்கிறார்?.. அவரை சந்தித்து பேச முடியுமா? என சிறை அதிகாரிகளிடம் ஸ்ரீகாந்த் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடை செய்யப்பட்ட கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் எனக்கு கொக்கைன் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டது என்றும் மூன்று முறை அவர் எனக்கு கொடுத்தார் எனவும், நான்காவது முறை தானே கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். மேலும் இந்த போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை 5 தனிப்படைகள் அமைத்து தேடிய நிலையில், நேற்று முன் தினம் அவர் நுங்கம்பாக்கம் போலீசில் ஆஜர் ஆனார்.
நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர் ஆன அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என வந்தது. ஆனால் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ரகசிய கோட் வேர்டு மூலமாக அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் மற்றவர்களுக்கும் சப்ளை செய்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோரை எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜூலை 10 ஆம் தேதி வரை கிருஷ்ணாவை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணா நன்றாக தூங்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே சிறையில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தினமும் புத்தகம் மற்றும் செய்தி தாள் படித்து வந்துள்ளார். அப்படித்தான் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்ட செய்தியையும் அவர் பார்த்து இருக்கிறார். உடனே அவர் சிறை அதிகாரிகளிடம் கிருஷ்ணா எங்கே அடைக்கப்பட்டு இருக்கிறார்? கிருஷ்ணாவை சந்தித்து பேச வேண்டும்.. பேச முடியுமா? என்று கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு சிறை அதிகாரிகள் கிருஷ்ணாவை பார்க்கவும், பேசவும் அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டனர்.
சிறையில் உள்ள நூலகத்துக்கு சென்று ஸ்ரீகாந்த் புத்தகங்களையும் விரும்பி படித்து வருகிறாராம். நடிகர் கிருஷ்ணாவும் புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவரும் முதல் வகுப்பு அறையில்தான் தனியாக அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications