இன்று வர முடியாது.. ED விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் ஸ்ரீகாந்த்.. போதைப்பொருள் வழக்கின் பின்னணி
சென்னை: போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது. இன்று நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜராகாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் தனியார் பாரில் கடந்த மே மாதம் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, அதிமுக நிர்வாகி பிரசாத், நாகேந்திர சேதுபதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது.

அவர்கள் வழங்கிய தகவலின் பேரில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்ற பிரிட்டோ, மேற்கு ஆப்பரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆகியோர் கடந்த ஜூன் 17ல் கைது செய்யப்பட்டனர். அப்போது சினிமா நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
கடந்த ஜூன் 23ல் நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அதேபோல் நடிகர் கிருஷ்ணாவும் ஜூன் 27 ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமீனில் உள்ளனர்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் கலாசாரம் உள்ளதாக குற்றச்சாட்டு இருந்தது. இப்படியான சூழலில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது என்பது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த போதைப்பொருள் விஷயத்தில் வெளிநாட்டு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரியவந்தது.
இதனால் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கி உள்ளது. தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை சார்பில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் ஸ்ரீகாந்த் இன்று (அக்டோபர் 28) விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இன்றைய தினம் ஆஜராக முடியவில்லை. இதனால் இன்னொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நடிகர் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் அக்டோபர் 29 (அதாவது நாளை) ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் மாற்று தேதி கேட்டுள்ள நிலையில் நாளை கிருஷ்ணா விசாரணைக்கு செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications