எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் கிடைக்கிறது..தமிழ்நாடு போதை நாடாக மாறியுள்ளது..சிவி சண்முகம் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு முழுக்க முழுக்க முடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் மாறி போதை நாடாக பெயர் மாறியிருக்கிறது என்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சிவி சண்முகம் ஆவேசமாக கூறினார்.

எம்.ஜி.ஆர் 106 -வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும் மாநிலங்களவை எம்.பியுமான சிவி சண்முகம் இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சி வி சண்முகம் கூறியதாவது:-

சிறுமியருக்கு பாதுகாப்பில்லை

சிறுமியருக்கு பாதுகாப்பில்லை

தமிழக அரசு முழுக்க முழுக்க முடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தினம் தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சிறுவர், சிறுமியருக்கு பாதுகாப்பில்லை. இதற்கெல்லாம் காரணம் இன்றைக்கு தமிழ்நாடு என பெருமையாக பேசும் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு என்ற பெயர் மாறி போதை நாடாக பெயர் மாறியிருக்கிறது.

தாராளமாக கிடைக்கிறது

தாராளமாக கிடைக்கிறது

இது தமிழ்நாடு இல்லை ஸ்டாலின் தலைமையிலான போதை நாடு. எங்கே பார்த்தாலும் கஞ்சா, அபின், ஊசி, போதை மாத்திரை, போதை சாக்லேட் தங்கு தடையின்றி கிடைக்கிறது. இன்னும் கேட்டால்.. போலீஸ் துப்பாக்கி வைத்து தான் பாதுகாப்பு கொடுக்கவில்லை. மற்ற எல்லாம் நடக்கிறது. எல்லா பள்ளி அருகிலும் கல்லூரி அருகிலும் மருத்துவமனை அருகிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் போதை பொருட்கள் தாரளமாக கிடைக்கிறது.

பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது

பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது

இன்றைக்கு மாணவர் சமுதாயம் திமுக ஆட்சியால் சீரழிந்து கொண்டு இருக்கிறது. கேட்டால் வியாக்ஞானம் பேசுகிறார்கள். அதனால்தான் ஆளுநர் அவர்கள் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை படிக்கவில்லை. தொழில் துறையில் முதன்மையான மாநிலம் என்று சொன்னார்கள். முதலிடத்தில் எங்கே இருக்கிறது. 7-வது இடத்தில் தமிழகம் உள்ளது. 2 ஆம் ஆண்டு கால திமுக ஆட்சியிலே தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. உண்மையை போடுங்கள்.. 7-வது இடத்தில் இருக்கிறது என மாற்றிக்கொடுங்கள் நான் படிக்கிறேன் என்று சொன்னார்.

ஆளுநரையே மிரட்டி ஒருமையில் பேசுகிறார்

ஆளுநரையே மிரட்டி ஒருமையில் பேசுகிறார்

நீங்கள் பொய் சொன்னால் அவர் படிக்க வேண்டுமா.. இன்றைக்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை. எங்கு பார்த்தலும் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழ்நாட்டில் பசி, பட்டினி, வேலையின்மை அதிகரித்துள்ளது இதனை திசை திருப்பவே மக்கள் உணர்ச்சிகளை தூண்டும் விதத்திலும், சட்டமன்றத்தில் கலவரம் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின். இன்றைக்கு தமிழக ஆளுநரையே மிரட்டி ஒருமையில் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்" என்று கடுமையாக விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+