12 டிஎஸ்பி, உதவி ஆணையர்கள் இடமாற்றம்.. பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இருந்து 59 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில் 12 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 59 டிஎஸ்பில்க்கள் பணியிட மாற்றம் செய்து பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டார்.

அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவுக்கும், மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி செந்தில் குமார் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமையகத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 12 டிஎஸ்பிக்கள் மற்றும் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆயுதப்படை உதவி ஆணையராக இருந்த சுப்பிரமணியம், கோயம்பேடு போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கோவை போக்குவரத்து உதவி ஆணையர் தென்னரசு, நீலகிரி ஆயுதப்படை டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை உதவி ஆணையர் முருகராஜ், கொளத்தூர் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி போக்குவரத்து காவல் உதவி ஆணையர் முகமது ரஃபி, தூத்துக்குடி ஆயுதப்படை துணை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராஜா, திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications