சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிம்மதிக்கும், ஆடம்பரத்திற்கும், பாதுகாப்பான முதலீட்டிற்கும் பெயர்பெற்ற துபாய், இன்று ஒரு இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம், அந்த நாட்டின் பொருளாதாரத்தூண்களான சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் விமான போக்குவரத்து துறைகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

இதன் நேரடி எதிரொலியாக, துபாய் பங்குச்சந்தை தற்போது 'பியர் மார்க்கெட்' (Bear Market) எனப்படும் சரிவுப் பாதைக்குள் நுழைந்துள்ளது.

Dubai Stocks

என்ன நடக்கிறது துபாயில்?

மத்திய கிழக்கு (Middle East)... பெட்ரோல் வாசத்தை விடவும் அங்கே எப்போதும் யுத்தத்தின் கருகிய வாசம் தான் அதிகம் வீசும். ஆனால், இப்போது வீசும் காற்று ஏதோ ஒரு சகாப்தத்தின் முடிவை (End of an Era) உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. நேற்று வரை 'பெட்ரோ டாலர்'களால் மினுக்கிய துபாயின் வானளாவிய கட்டிடங்களும், சவூதியின் பாலைவனக் கோட்டைகளும் இன்று ஒருவிதமான மௌனத்தில் மூழ்கியிருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் உச்சத்தில் இருந்த துபாய் பங்குச்சந்தை குறியீடு, தற்போது அதிலிருந்து 21% வரை சரிவைச் சந்தித்துள்ளது. பொதுவாக ஒரு சந்தை அதன் உச்சத்தில் இருந்து 20% கீழே விழுந்தால், அதை முதலீட்டாளர்கள் ஆபத்தான சரிவாகக் கருதுவார்கள்.

இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணங்கள்:

பல தசாப்தங்களாக, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற சன்னி முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவைத் தான் தங்களின் 'பெரிய அண்ணனாக' நம்பியிருந்தன. ரியாத் முதல் அபுதாபி வரை அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. "எங்களைத் தொட்டுப் பார்... அமெரிக்கா வரும்" என்ற தைரியத்தில் தான் துபாய் போன்ற நகரங்கள் உலக சுற்றுலா மையங்களாக உருவெடுத்தன.

ஆனால், வரலாறு எப்போதும் ஒரு புள்ளியில் மாறும். அந்தப் புள்ளி இப்போது ஈரானின் வடிவில் வந்திருக்கிறது.

வான்வழித் தாக்குதல்கள்: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல்கள் காரணமாக, துபாய் வான்பரப்பில் அவ்வப்போது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்படுகின்றன. சமீபத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடந்த ட்ரோன் தாக்குதல்கள் விமானப் போக்குவரத்தை நிலைகுலையச் செய்துள்ளன.

ரியல் எஸ்டேட் வீழ்ச்சி: துபாயின் அடையாளமாகத் திகழும் 'எமார்' (Emaar Properties) நிறுவனத்தின் பங்குகள் சுமார் 34% முதல் 35% வரை சரிந்துள்ளன. போர் பயம் காரணமாக புதிய முதலீடுகள் குறைந்து வருவது கட்டுமானத் துறையைப் பாதித்துள்ளது.

சுற்றுலா முடக்கம்: உலகின் சுற்றுலா மையமாக விளங்கும் துபாய்க்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு காரணங்களால் குறையத் தொடங்கியுள்ளது.

ஆறு ஆண்டு கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை

கடந்த ஆறு ஆண்டுகளில் துபாய் பங்குச்சந்தை சுமார் 300% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஆனால், தற்போது நிலவும் புவிசார் அரசியல் சூழல் (Geopolitical situation) அந்த வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது. 'பாதுகாப்பான முதலீட்டு தலம்' என்ற துபாயின் பிம்பம் இந்த மோதல்களால் சிதைந்து வருவதுதான் கவலைக்குரிய விஷயம்.

"இது எதிர்பார்க்கப்பட்ட சரிவுதான். போர் பதற்றம் தணிந்து நிலைமை சீராகும்போது, குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும்," என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு

எண்ணெய் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து பாதிப்பு மற்றும் தொடர் வான்வழித் தாக்குதல்கள் என நெருக்கடிகள் சூழ்ந்தாலும், துபாய் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+