சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைவாசிகளே! தப்பி தவறியும் இந்த பக்கம் போகதீங்க... ரொம்ப மோசமான டிராபிக் ஜாம்!

Google Oneindia Tamil News

சென்னை: தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை முதலே சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    AIADMK பொதுக்குழு கூட்டம் | EPS VS OPS | Oneindia Tamil

    கடந்த சில நாட்களாகவே அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் தான் தமிழக அரசியலில் பேசுபொருளாக இருந்தது. கடந்த வாரம் ஒற்றை தலைமை விவகாரத்தில் இது தொடங்கியது.

    முதலில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கிட்டத்தட்ட சரிசமமான பலமே இருந்தது. இருப்பினும், நாட்கள் செல்ல செல்ல பலரும் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர்.

    ஒற்றைத் தலைமை.. பொடி வச்சு பேசிய இபிஎஸ் தரப்பு.. பூனை வெளியே வந்துவிட்டதுனு கூறிய மனுதாரர்! ஒற்றைத் தலைமை.. பொடி வச்சு பேசிய இபிஎஸ் தரப்பு.. பூனை வெளியே வந்துவிட்டதுனு கூறிய மனுதாரர்!

     அதிமுக

    அதிமுக

    மேலும், பொதுக்குழுவிலும் கூட எடப்பாடி தரப்பிற்கே ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் எடப்பாடி கைக்குக் கட்சி முழுமையாகச் செல்லும் என்ற நிலை உருவான நிலையில், ஒபிஎஸ் இதைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்தார். முதலில் பொதுக்குழுவில் கலந்து கொள்ளக் கூடாது என அதிமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதினார். இருப்பினும், அதற்குப் பெரியளவில் ரெஸ்பான்ஸ் இல்லை.

     ஆதரவு அதிகரிப்பு

    ஆதரவு அதிகரிப்பு

    ஒவ்வொரு நாளும் எடப்பாடிக்கான ஆதரவாளர்கள் அதிகரித்து வந்த நிலையில், கடைசி முயற்சியாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் ஓபிஎஸ்! முதலில் பொதுக்குழு முடிவில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. ஆனால் மேல்முறையீட்டில் பொதுக்குழு நடத்தலாம், ஆனால் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

     வானகரம் மண்டபம்

    வானகரம் மண்டபம்

    இப்படி பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடக்கிறது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு உள்ளே, வெளியே, இணைப்பு சாலைகளில் மொத்தம் 2000 போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.

     அதிமுக நிர்வாகிகள்

    அதிமுக நிர்வாகிகள்

    இன்று அதிகாலை முதலே மண்டபம் நோக்கி அதிமுக நிர்வாகிகள் குவிந்து வருகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மண்டபம் உள்ளே அனுமதி அளிக்கப்படுகிறது. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில், இதில் பங்கேற்க ஆவலுடன் வரும் தொண்டர்கள் ஸ்ரீவாரி மண்டபம் முன்பு குவிந்து வருகின்றனர்.

     போக்குவரத்து நெரிசல்

    போக்குவரத்து நெரிசல்

    மேலும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பில் மண்டபத்தை சுற்றிப் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில், மதுரவாயில், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு மேம்பாலம் முதல் மதுரவாயல் வரை போக்குவரத்து நெரிசல் மோசமாக உள்ளது. இந்த சாலையில் வானகங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே காணப்படுகிறது. இன்று பணி நாள் என்பதால் வேலைக்குச் செல்வோர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     சாலை

    சாலை

    பள்ளி, கல்வி செல்வோரும் இதனால் சரியான நேரத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுக் கூட்டத்திற்கு மத்தியில் பள்ளிக்கு செல்லும் சிறுவன் சைக்கிளுடன் மாட்டிக்கொண்ட நிலையில், அச்சிறுவனைக் காவலர்கள் பத்திரமாக மீட்டு கூட்டத்திலிருந்து வெளியே அனுப்பினர். ஏற்கனவே அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால் புழல்-தாம்பரம் வெளிவட்ட சாலையில் இருந்து கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Heavy traffic jam in and around Vanakaram due to admk meeting: (சென்னை வானகரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல்) All things to know about Chennai traffic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X