இப்படி ஒரு சிக்கலா? மத்திய அரசு போட்ட உத்தரவு.. மொத்தமாக ஏறப்போகும் விலை.. பதறும் மிடில் கிளாஸ்
சென்னை: மத்திய அரசு சமீபத்தில் போட்ட உத்தரவு ஒன்றால் நாடு முழுக்க விலைவாசி உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உலக அளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பல இடங்களில் பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் வானிலை மாற்றம் காரணமாக துருவ பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.
அதிலும் அண்டார்டிகாவில் நினைத்ததை விட வெப்பநிலை வேகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் ஐநா காலநிலை மாற்ற ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் வெப்பநிலை உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இந்த கோடை காலத்தில் மிக கடுமையான வெயில் மற்றும் வெப்ப காற்று அடித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளனர். மோசமான வெப்பநிலை ஓசோனை மாசுபடுத்தும். இதனால் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும். முக்கியமாக உ.பி., பீகார் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால் மக்களாக கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். வட இந்தியா கடுமையான வெப்பத்தில் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.
உத்தரவு: இந்த நிலையில்தான் வெயிலை கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கியமான ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி அனைத்து லாரி கேபின்களும் 2025 முதல் கட்டாயமாக குளிரூட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
அதாவது லாரிகளில் டிரைவர்கள் இருக்கும் பகுதிகள் ஏசி லாரிகளாக மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. பெரும்பாலும் லாரி டிரைவர்கள் 11-12 மணிநேரங்கள் கடும் வெயிலில் லாரி ஓட்டுகிறார்கள். கடினமான பணிச்சூழல்கள் மற்றும் சாலையில் நீண்ட நேரம் இருப்பது மற்றும் ஓட்டுநர் சோர்வு ஆகியவை விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன.
வோல்வோ மற்றும் ஸ்கேனியா போன்ற உலகளாவிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட உயர்தர டிரக்குகள் ஏற்கனவே குளிரூட்டப்பட்ட கேபின்களுடன் வந்துள்ளன. ஆனால் இந்தியாவில் இவை இன்னும் பயன்பாட்டுற்கு வரவில்லை. பல ஆண்டுகளாக இந்த பிரச்சினையில் விவாதம் நடந்தாலும் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் லாரிகளில் ஏசிகளை வைப்பது இல்லை.

இந்த நிலையில்தான் அனைத்து லாரி கேபின்களும் 2025 முதல் கட்டாயமாக குளிரூட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் போட்ட இந்த உத்தரவால் நாடு முழுக்க விலைவாசி உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆம் லாரிகளில் ஏசி பொருத்தப்படும் பட்சத்தில் அதன் காரணமாக போக்குவரத்து செலவு அதிகரிக்கும். டீசல் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் விலைவாசி இரட்டிப்பு ஆகும். காய்கறிகள் தொடங்கி பெட்ரோல், டீசல் வரை விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. 2025க்குள் இதை கொண்டு வர வேண்டும் என்பதால் விரைவில் லாரிகள் ஏசி லாரிகளாக மாறும். இதனால் விரைவில் விலைவாசி உயரும்.
கேஸ் சிலிண்டர்களின் விலையும் இதனால் அதிகரிக்கும். லாஜிஸ்டிக்ஸ் விலை உயர்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொடும். எனவே மத்திய அரசின் ஏசி லாரி உத்தரவு மிடில் கிளாஸ் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications