சென்னையில் இன்று மின்தடை.. பெருங்களத்தூர், நொளம்பூர், சோத்துப்பாக்கம் மக்களே கவனம்
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலையில் பெருங்களத்தூர், நொளம்பூர், சோத்துப்பாக்கம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழகத்தில் மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் இந்த பணிகள் நடந்து வருகிறது.

இந்த பராமரிப்பு பணியின்போது பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். அந்த வகையில் சென்னையில் இன்று சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் தடைப்படஉள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 13.11.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
பெருங்களத்தூர்: மங்களா அபார்ட்மென்ட், செருஸ்டி வில்லா, ஜிகேஎம் காலேஜ் ரோடு, ஜெட் வாட்டர், கேகே நகர், பெருமாள்புரம், சரவணா நகர், கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜோயல் அபார்ட்மென்ட் மற்றும் எஸ்வி வார்ம்ஸ் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
நொளம்பூர்: எஸ்பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் பகுதி, குருசாமி சாலை, நெளம்பூர் கட்டம் I & II, யூனியன் சாலை, விஜிஎன் நகர் 1 முதல் 4 வரை, 1வது, 2வது, 3வது, 4வது, வது, 6வது மற்றும் 8 வது பிளாக், கம்பர் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டிபாளையம் அவென்யூ, எம்சிகே லே அவுட், எம்ஜிஆர் பல்கலைக்கழகம், பாணன் சோலை தெரு, மாதா கோவில் பகுதி, பெருமாள் கோவில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சோத்துப்பாக்கம்: பாலாஜி கார்டன், புதுநகர், பைபாஸ் ரோடு, அருண் உல்லாச சிட்டி, சாந்தி காலனி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications