கனமழை எதிரொலி... இந்த 4 மாவட்டங்களில் நாளையும்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை கரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு விடுமுறை
இந்நிலையில், நாளைய தினமும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும் (நவ. 12) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு இதுவரை விடுமுறை அளிக்கப்படவில்லை.

மீட்பு பணிகள்
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் ஒரு புறம் நடைபெற்று வந்தாலும் கூட மழை தொடர்ந்து பெய்து வருவதால் நிவாரணப் பணிகளையும் மீட்புப் பணிகளையும் விரைவாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் வரையிலும் கனமழை பெய்யும் என்பதால் அதன் பின்னரே மீட்புப் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் அதிக மழை
பொதுவாகக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியே கரையைக் கடக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் மழையின் அளவு குறைந்து, காற்றின் வேகம் அதிகரிக்கும். ஆனால், இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடப்பதால் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமையைச் சமாளிக்க அரசு சார்பிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் உதவிகளைப் பெற 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications