உங்களை பார்த்தா பரிதாபமா இருக்கு.. வடிவேலு பாணியில் துரைமுருகன் அட்டாக்!
துரைமுருகன் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு துரைமுருகன் பதிலளித்து உள்ளார்.
Recommended Video

சென்னை: "தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் எங்க கிட்ட தேமுதிக பேசணும்? " என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சுதீஷின் குற்றச்சாட்டுகளுக்கு வினா எழுப்பி உள்ளார்.
கூட்டணியில் சேர்த்து கொள்ளவில்லையே என்ற விரக்தியோ, அல்லது பேச்சுவார்த்தை விஷயத்தை இப்படி துரைமுருகன் அம்பலப்படுத்தி விட்டாரே என்ற அவமானமோ தெரியவில்லை.. திமுக மீது சுதீஷ் சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
உச்சக்கட்டமாக துரைமுருகன் அவர் கட்சியை பேசியதை பற்றி வெளியில் சொன்னால் அசிங்கமாகிவிடும் என்று அரசியல் நாகரீகமே இல்லாமல் பேட்டி தந்திருந்தார்.

தேமுதிக
இதற்கு இப்போது துரைமுருகன் காரசாரமாக கேள்வி எழுப்பி பதில் அளித்துள்ளார். "தேமுதிக நிர்வாகிகள் மாறி மாறி பேசி வருகிறார்கள். என்கிட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிக வந்தாங்க. அப்போ என்னுடைய நிலைமையை எடுத்து சொன்னேன். அவ்வளவுதான்.

சொந்த காரணமா?
தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவுமே இல்லை. சொந்த காரணத்திற்காக தேமுதிக நிர்வாகிகள் எதுக்காக என்னை சந்திக்கணும்? தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் பேச்சுவார்த்தை நடத்தணும்?

2 பேர் தெரியும்
தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது. எனக்கு மோகன் ராஜைத் தெரியும், சுதீஷைத் தெரியும். நேற்று வந்த 2 பேரையும் யார் என்றே தெரியாது. அனகாபத்தூர் முருகேசன் யார் என்றே தெரியாது.

மரியாதை
தேமுதிக நிர்வாகிகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். தேமுதிககாரங்க ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை. சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார். மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காகவே இப்போது எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்" என்றார் துரைமுருகன்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications