அன்புமணியா? அதெல்லாம் அவங்க வீட்டு சமாச்சாரம்! நமக்கு ஏன்? துரைமுருகன் கலகலப்பு! முகத்தை பார்க்கணுமே
சென்னை: அன்புமணி பாமகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, "அது அவங்க வீட்டுக்குள்ள நடக்குற சமாச்சாரம், நமக்கு எதுக்கு?" என அமைச்சரும் திமுக பொதுச் செயலாளரும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அன்புமணி மீது குற்றச்சாட்டுகளுக்கு அவர் இரு முறை வாய்ப்பளித்தும் பதில் தராததால் அவர் பாமகவிலிருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார்.
அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர், தொடர்ந்து விஜய் திமுகவை தாக்கிப் பேசுகிறாரே என கேட்டதற்கு துரைமுருகன், "அதுல இருந்தே தெரியுதா வெயிட்டான கட்சி திமுகதான்"னு.

அது போல் பாமகவிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டது குறித்து துரைமுருகனிடம் கேள்வி எழுப்பிய போது, "அது அவங்க வீட்டுக்குள்ள நடக்குற சமாச்சாரம், நமக்கு எதுக்கு?" என பதில் அளித்தார். துரைமுருகனின் பாடி லேங்குவேஜ், முக பாவனை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த வகையில்தான் நமக்கு எதுக்கு என கேட்டு தன் முகத்தில் அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில் திமுக கூட்டணி சிதறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போகிற போக்கில் பேசுகிறார். பாவம்! ஏதாவது பேச வேண்டும் என்றுதான் பேசுகிறார். ஆனால் அது எங்களுக்கு ஆதரவாக போய்விடுகிறது.
விஜய் கட்சி நிகழ்ச்சிக்கு திமுக தடை என சொல்லும் தவெக புஸ்ஸி ஆனந்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எனது அரசியல் சர்வீஸ் வேறு, அவர்களது அரசியல் சர்வீஸ் வேறு. தமிழகத்துக்கு எப்படியாவது கெட்ட பெயர் வேண்டும் என பிரதமர் நினைத்தால் அது நல்லது அல்ல. அப்படி நினைப்பாரா என சந்தேகம் உள்ளது. ஆனால் நிலைமை அப்படி தான் உள்ளது என்றார்.
மேலும் அவரிடம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து கேள்வி கேட்ட போது "தமிழகம் பீகார் இல்லை. தமிழகம் என்பது மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலம். அங்குள்ளது போல் இங்கு நிர்வாகம் இல்லை. இங்கு ஸ்டாலின் தலைமை உள்ளது. இது போன்ற தந்திரங்கள் தமிழகத்திலோ அல்லது தலைவரிடம் வேலை செய்யாது என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது, நீண்ட காலமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருந்து வந்த அதிகாரப் போட்டியின் விளைவாகவே பார்க்கப்படுகிறது.
முக்கிய காரணங்கள்:
கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள்: அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், சிலருடன் இணைந்து தனிப் பிரிவாக இயங்குவதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
விளக்கம் அளிக்காதது: கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி, விளக்கம் கேட்டு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. இதனால், குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
அதிகாரப் போட்டி: கட்சிக்குள் தலைவர் பதவி மற்றும் முக்கியப் பொறுப்புகளை வழங்குவது தொடர்பான கருத்து வேறுபாடுகள் பல மாதங்களாக இருந்து வந்தன. அன்புமணி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.
"களை" நீக்கம்: அன்புமணி கட்சியை அழிப்பதாகவும், அவர் ஒரு அரசியல்வாதியாக இருக்கத் தகுதியில்லாதவர் என்றும் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அவரை "களை" என்று கூறி, கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பவரை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications