Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ரொம்ப கவனமா இருக்கனும்”.. திருமாவளவனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கே சென்று துரை வைகோ அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தமிழ்நாடு திரும்பினார். டெல்லியில் இருந்து வந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

Durai Vaiko meet Thirumavalavan who is admitted in hospital due to fever

இதனை தொடர்ந்து அவர் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனை அடுத்து 30 ஆம் தேதி வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க வரவேண்டாம் என அக்கட்சி அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் திருமாவளவன் உடல் நலம்பெற பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தனியார் மருத்துவமனைக்கு சென்று திருமாவளவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Durai Vaiko meet Thirumavalavan who is admitted in hospital due to fever

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அவர், "விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுடன் சந்திப்பு.. தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்தேன்.

அயராத அரசியல் பயணத்திற்கு இடையே தங்களின் உடல் நலத்தையும் பேண வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். ஏற்கனவே தங்களிடமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களிடமும் பலமுறை இது பற்றி கூறியுள்ளேன் என்றதும், ஆமாம்.. தம்பி ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார் என்று உடன் இருந்தவர்களிடம் சொல்லிக் காட்டி ஆமோதித்தார்.

Durai Vaiko meet Thirumavalavan who is admitted in hospital due to fever

தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கும் நிலையில் அண்ணனை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இயன்றவரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தவிர்க்க இயலாத நிலையில் சந்திக்க வரும் பார்வையாளர்கள் கட்டாய முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அண்ணனிடமும், மருத்துவரிடமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களிடமும் கேட்டுக்கொண்டேன்.

ஏனென்றால் இதுபோன்ற சூழலில் பார்வையாளர்கள் மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டு மேலும் பலவீனப்படுத்தி விடும் என்ற அக்கறையுடனும் கவலையுடனும் கேட்டுக் கொண்டேன். விரைவில் பூரண நலமடைந்து அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என்றும், அவ்வப்போது சீரான ஓய்வும், உறக்கமும் தேவை என்று அண்ணனிடம் கூறிவிட்டு விடைபெற்றேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+