உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் வைகோவின் மகனும் மதிமுக எம்.பி.யுமான துரைவைகோ. இந்த சந்திப்பில், விஜய்யிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் துரை. பேச்சின் சாராம்சத்தை அறிந்து அறிவாலயம் ஏக கடுப்பில் இருக்கிறதாம்.

திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இருந்து வந்த அதன் தோழமைக் கட்சிகளில் மதிமுகவை தவிர மற்ற கட்சிகள் தவெக ஆதரவு நிலை எடுத்து அந்த பக்கம் சென்று விட்டது. மதிமுக மட்டுமே பாக்கி. திமுக மீது குறிப்பாக ஸ்டாலின் மீது அண்மைக்காலங்களில் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட வைகோ, திமுக கூட்டணியிலேயே நீடிக்கலாமே என்கிற கருத்தில் இருந்து வந்திருக்கிறார். ஆனால், திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என துரை வைகோ அடம் பிடித்தபடி இருந்தார்.

Durai Vaiko

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று வைகோவுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறார் துரை. அதில் ஓரளவுக்கு வைகோ மயங்கியதால் தான், அண்மையில், மாற்று கட்சியினரை ராஜினாமா செய்து வைத்து தவெகவில் இணைய வைக்கும் விஜய்யின் அரசியலை விமர்சித்த திமுகவுக்கு பதிலடி தந்திருந்தார். ஆனாலும், திமுகவை விட்டு விலகும் மனநிலைக்கு 100 சதவீதம் வைகோ இன்னும் வரவில்லை. அதற்காகத்தான் மதிமுகவின் பொதுக்குழுவை 27-ந்தேதிக்கு கூட்டியி ருக்கிறார் வைகோ. இப்படிப்பட்ட சூழலில்தான், விஜய்யை சந்தித்தார் துரை வைகோ.

அந்த சந்திப்பு குறித்து மதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ''அந்த சந்திப்பில் மனம் விட்டு பேசியிருக்கிறார் துரை. குறிப்பாக, திமுக தனது தோழமைக் கட்சிகளை அடிமையாகத்தான் வைத்திருந்தது. இதில் எனக்கு உடன்பாடே இருந்ததில்லை. இது பற்றி அப்பாவிடம் (வைகோ) நான் பல முறை சண்டைப் போட்டிருக்கிறேன். சுயமாரியாதையும் தன்மானத்தையும் எங்களு க்கெல்லாம் (மதிமுகவினருக்கு) ஊட்டி வளர்த்த நீங்கள், திமுகவின் மகுடிகளுக்கு வளைந்து கொடுக்கலாமா? என அப்பாவிடம் சண்டைப்போட்டிருக்கிறேன்.

கலைஞர் மீதும் ஸ்டாலின் மீதும் எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கிறது. அதைத்தாண்டி கலைஞர் என் தலைவர். அவரில்லாமல் நான் அரசியலில் இல்லை. எனக்கு எதிராக சதியை கலைஞர் செய்த போதும் கூட, அதனை அரசியல் ரீதியாக கலைஞரை விமர்சனம் செய்திருப்பேனே தவிர, தனிப்பட்ட காழ்ப்பில் நான் அவரை எதிர்த்ததில்லை. அதனால்தான், என் தலைவரின் மகன் அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் திமுகவை ஆதரித்தோம் என என்னிடத்தில் அப்பா விளக்கம் சொல்லியிருக்கிறார் என்று துரை வைகோ சொல்ல, அதனை புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்.

தொடர்ந்து பேசிய துரை, 2024 மற்றும் 2026 தேர்தல் நேரத்தில் திமுகவின் அணுகுமுறை எனக்குப்பிடிக்கவில்லை. கிள்ளுக்கீரையாகவும், அடிமையாகவும் தான் மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை ஸ்டாலின் நடத்தினார். சூரியன் சின்னத்தில் நிற்க திமுக சொன்னபோது, கட்சியை கலைத்து விட்டு, திமுகவில் இணைந்துவிடுங்கள் என அப்பாவிடம் கோபப்பட்டவன் நான். அது மட்டுமல்ல, திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு, தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என நான் சொன்னேன். இதையறிந்த ஸ்டாலின், அப்பாவை (வைகோ) சந்தித்து ஆதங்கமாக பேசினார். அதில் கலங்கிப்போன என அப்பா, திமுக கூட்டணியில் நீடிப்பது என்கிற கசப்பான முடிவை அப்போது எடுத்தார் .

இப்போது தான் அது தவறான முடிவு என திமுக மீது மெல்ல மெல்ல அவருக்கு கோபம் வருகிறது. சூரியன் சின்னத்தில் நின்று வெற்றிப்பெற்ற 2 தொகுதிகளையும் ராஜினாமா செய்து விட்டு, தனித்த அரசியல் முடிவுகளை மதிமுக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். மதிமுகவினரின் உணர்வுகளும் இதையொட்டித்தான் இருக்கிறது. இது பற்றி விவாதிக்க கட்சியின் பொதுக் குழுவை கூட்டவிருக்கிறோம். அதில் நல்ல முடிவு எடுப்போம் என பல விசயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார் துரை. இதனை கேட்ட விஜய், ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு அவர்கள் (திமுக) ஆடிய ஆட்டம் சகிக்கவில்லை. எப்போதுமே ஆதாயத்துக்காக மட்டும் தான் கூட்டணி கட்சிகளை திமுக பயன்படுத்தும் என கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களுக்கு கிடைத்திருப்பது பதவி அல்ல ; பொறுப்பு என்று தான் திமுக தலைவர் அடிக்கடி சொல்லுவாராம். ஆனா, அதிகாரப் பதவிக்கு வந்ததும் பொறுப்பை மறந்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள். அவர்கள் (திமுக) சம்பாதிச்சு, சம்பாதிச்சு என்ன பண்ணப் போறாங்க ? என கமெண்ட் அடித்திருக்கிறார் விஜய்'' என்று சந்திப்பில் நடந்ததை விவரிக்கிறது மதிமுக வட்டாரம்.

இதற்கிடையே, விஜய்-துரை சந்திப்பில் என்ன நடந்தது என்பதை விசாரித்துள்ளது திமுக தலைமை. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதய நிதி ஸ்டாலின் விசாரித்திருக்கிறார். திமுகவுக்கு எதிராக எடுக்கப்போகும் முடிவு குறித்து விஜய்யிடம் துரை பேசியதையும், தனக்கு எதிராக துரை மிக கடுமையாக விஜய்யிடம் பகிர்ந்து கொண்டதாகவும் உதயநிதிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை ஸ்டாலினின் கவனத்துக்கு உதயநிதி கொண்டு போக, துரை மீது ஏக காட்டத்தில் இருக்கிறதாம் திமுக.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+