லோக்சபா தேர்தல்:வைகோ மகன் துரை வைகோ, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டி? "பெற்றோர்" சொல்வது என்ன?
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற மதிமுக துரை வைகோ, தேமுதிக விஜய பிரபாகரன் குறித்து பெற்றோர்களான வைகோ, பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்துகள் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. தேசிய அளவில் "இந்தியா" கூட்டணியிலும் மதிமுக இடம் பெற்றிருக்கிறது.

தேமுதிகவைப் பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி கூட்டிய 38 கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை. இத்தனைக்கும் தேமுதிகவை மிக மிக சிறிய கட்சிகள் கூட டெல்லி கூட்டத்துக்கு அழைக்கப்பட்டது. இது தேமுதிகவை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போதைய நிலையில் தேமுதிக திக்கு தெரியாத திசையில் நிற்கிறது.
விஜய பிரபாகரன் குறித்து பிரேமலதா: இந்நிலையில் செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவில் எனக்கு பதவியே 15 ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. தேமுதிகவில் யாருக்கு என்ன பதவி என்பதை விஜயகாந்த் மட்டுமே முடிவெடுப்பார். அதேபோல விஜய பிரபாகரனுக்கு என்ன பதவி? அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது என்றார். ஆனால் விஜய பிரபாகரனை தேர்தல் களமிறக்க தேமுதிக திட்டமிட்டு வருகிறது; ஏதேனும் ஒரு கூட்டணியில் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தால்தான் இதனைகூட தேமுதிக பரிசீலிக்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
துரை வைகோவும் தேர்தலும்: இதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யின் மகன் துரை வைகோ, சட்டசபை தேர்தலின் போதே போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் துரை வைகோ போட்டியிடவில்லை. இதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா? என்கிற விவாதங்கள் நடைபெறுகிறது. துரை வைகோ, லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் திமுக தலைமை அவரது வெற்றியை உறுதி செய்யும் என்கிற ஒரு நம்பிக்கையும் உள்ளது.
துரை வைகோ குறித்து வைகோ: ஆனால் மதுரையில் நேற்று நடைபெற்ற மதிமுக மாநாட்டில், என் மகன் என்னைப் போல பதவிகளுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றார். அத்துடன் தேர்தலில் போட்டியிடவோ, பதவிக்காக துரை வைகோ அரசியலுக்கு வரவில்லை என அழுத்தம் திருத்தமாக வைகோ கூறினார். ஒருவேளை லோக்சபா தேர்தலிலும் துரை வைகோவை போட்டியிட வைக்க வேண்டாம் என வைகோ முடிவெடுத்துவிட்டாரோ என்கிற கேள்வியை இது எழுப்புகிறது.
வைகோவின் கணக்கு?: இன்னொரு பக்கம், வைகோவின் ராஜ்யசபா எம்பி பதவிகாலம் இன்னும் காலம் இருக்கிறது. வைகோவுக்குப் பின்னர் மகன் துரை வைகோவை அந்த ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு திமுக உதவியுடன் கொடுத்துவிடலாம் என கணக்கு போடுகிறாரா? வைகோ என்கிற கேள்வியும் மதிமுக மூத்த நிர்வாகிகளால் எழுப்பப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications