அண்ணாவே மிரண்ட பேனா.. கருணாநிதியின் பேனா குறித்து கைநாட்டுகளுக்கு என்ன தெரியும்? துரைமுருகன் கேள்வி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா குறித்து கைநாட்டுகளுக்கு என்ன தெரியும் என அமைச்சர் துரைமுருகன் கேள்வி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சாதாரண பேனா அல்ல, அறிஞர் அண்ணாவே மிரண்டு போன பேனா, அந்த பேனாவை பற்றி கைநாட்டுகளுக்கு என்ன தெரியும்? என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் ரூ 81 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு முதல் கட்டமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அடுத்தது சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் கடந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேனா சின்னத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சி
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேனா நினைவு சின்னத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் வைக்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. கருணாநிதியின் சமாதி அருகே வைத்துக் கொள்ளட்டும்.

கடலுக்குள் வேண்டாம்
ஆனால் கடலுக்குள் வேண்டாம் என்கிறோம். பேனா சிலை வைத்தால் கடலில் மாசு ஏற்படும். கடல் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த சிலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டுவிட்டு செல்வார்கள். இது கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

திருவள்ளுவர் சிலை
குமரி கடலில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது என்றால் அங்கு ஏற்கெனவே இருந்த பாறையில் வைக்கப்பட்டது. ஆனால் பேனா சிலையை வைக்க ஏராளமான மணல், கற்கள் கொட்டப்பட்டு அதன் மேல் சிலை வைக்கப்படுகிறது. எனவே எதிர்ப்பை மீறி பேனாவுக்கு சிலை வைத்தால் அதை உடைப்பேன் என காட்டமாக கூறியிருந்தார். இதற்காக சீமானுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

பேனா சிலைக்கு எதிர்ப்பு
அது போல் பேனா சிலைக்கு அதிமுகவும் , பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி கலைஞருக்கு பேனா சிலை வைக்கட்டும், அதை அண்ணா அறிவாலயத்தில் வைக்கட்டும், யார் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் கடலுக்குள் வைப்பதைத்தான் அனைவரும் எதிர்க்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் துரைமுருகன்
இந்த நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் கருணாநிதியின் பேனா சாதாரண பேனா அல்ல. அண்ணாவே பார்த்து மிரண்டு போன பேனா.

ஆற்றல் மிக்க முதல்வர்
அந்த பேனாவை பற்றி கைநாட்டுக்கு என்ன தெரியும்? இந்த பேனாவிற்கு உயிரோட்டம் உள்ளது. அந்த பேனாவை நிறுத்தி காட்டுவோம். கருணாநிதியை மிஞ்சக் கூடிய ஆற்றல் முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளது. இந்தியாவே பாராட்டும் வகையில் அடிபணிகிற முதல்வராக எதிர்காலத்தில் வருவார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications