வழக்கமாக எச். ராஜாதான் ஆதரவு தெரிவிப்பார்.. பொன். மாணிக்கவேலுக்கு துரைமுருகனும் ஆதரவு குரல்!
பொன்.மாணிக்கவேலுக்கு துரைமுருகன் ஆதரவு கரம் நீட்டி உள்ளார்.
சென்னை: நாலாபக்கமும் பொன்.மாணிக்கவேலுக்கு எதிர்ப்பு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார் திமுக பொருளாளர் துரைமுருகன்.
சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக மீண்டும் பணி நீட்டிப்பு செய்யப்பட்டதில் இருந்தே பொன் மாணிக்கவேலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. குறிப்பாக எல்லா எதிர்ப்புகளையும் அரசு தரப்புதான் சொல்லி வருகிறது.
பொன்.மாணிக்க வேலுக்கு எதிராக கூடுதல் துணை காவல் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் காவலர்கள் டிஜிபியிடம் ஏற்கனவே 2 முறை புகார் கொடுத்துவிட்டனர். இன்னொரு பக்கம், பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு போட சொல்வதாக கூறி சிலை கடத்தல் தடுப்பு காவலர்கள் சிலர் தங்களுக்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்தும் உள்ளனர்.

சி.வி.சண்முகம்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, சட்ட அமைச்சர் சிவி சண்முகம் "கூடுதல் துணை காவல் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் டிஜிபியிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும், பொன் மாணிக்கவேலு நல்லவர் என்று யார் சொன்னது'' என்று தடாலடியாக கேட்டு பேட்டியும் தந்தார்.

துரைமுருகன்
இப்படி பல்வேறு கண்டனங்கள், விமர்சனங்கள் பொன்.மாணிக்கவேலு மீது எழுந்து வருகிறது. இந்த நிலையில்தான் திமுக பொருளாளர் துரைமுருகன் பொன்.மாணிக்கவேலு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

பனிப்போர்
''சிலை திருட்டு மிக ஆபத்தானது, சிலை திருட்டை அரசே ஆதரிக்கிறதா என சந்தேகம் எழுகிறது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுவை தமிழக அமைச்சரே விமர்சிக்கலாமா?" அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடையே பனிப்போர் ஏற்படக் கூடாது. அதிகாரிகள் இல்லாவிட்டால் அரசு நிர்வாகம் நடத்த இயலாது" என்றார்.

கடும் அதிருப்தி
எப்போதுமே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாதான் பொன்.மாணிக்கவேலுக்கு சப்போர்ட் ஆக இருப்பார். ஆனால், இப்போது துரைமுருகனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது ஆளும் தரப்புக்கு மேலும் எரிச்சலைதான் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications