அப்பாடா.. 8வது முறையா காட்பாடி எம்எல்ஏ ஆனார் துரைமுருகன்.. 758 வாக்கு வித்தியாசத்தில் ஜஸ்ட் எஸ்கேப்!
வேலூர்: காட்பாடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் 758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 ஆவது முறையாக காட்பாடி எம்எல்ஏவானார்.
திமுக பொதுச் செயலாளராக உள்ளவர் துரைமுருகன். இவர் காட்பாடி சட்டசபைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். தற்போது 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் துரைமுருகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. இதில் தபால் வாக்குகளுக்கு பிறகு மக்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டன.

திமுக
இதில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் பின்னடைவை சந்தித்து வந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி ராமு முன்னிலை வகித்து வந்தார். இது திமுகவினரிடையே அதிர்ச்சயை ஏற்படுத்தியது.

துரைமுருகன்
காட்பாடி தொகுதியானது வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்டது. இதன் வேட்பாளராக உள்ளவர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். திமுகவின் கோட்டை காட்பாடி சட்டசபைத் தொகுதியாகும். இந்த தொகுதியில் துரைமுருகன் 7 முறை வென்றுள்ளார்.

ஸ்டாலின்
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பே துரைமுருகனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என போர்க் கொடி எழுந்தது. இது தொடர்பாக ஸ்டாலினுக்கே கடிதம் எழுதப்பட்டது.

வெற்றி
எனினும் துரைமுருகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வரும் துரைமுருகன் இந்த தேர்தலில் 758 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இதன் மூலம் 8ஆவது முறையாக காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications