பூந்தமல்லியில் திடீர் ‛புழுதிப்புயல்'.. நடுங்கிப்போன இளைஞர்கள்.. சென்னை சூறைக்காற்றால் சம்பவம்
சென்னை: சென்னையில் இன்று மாலையில் கடும் சூறைக்காற்றுக்கு நடுவே கனமழை பெய்தது. இந்த சமயத்தில் பூந்தமல்லி காந்தி நகர் விளையாட்டு மைதானத்தில் வீசிய சூறைக்காற்றால் புழுதிப்புயல் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் விளையாடிய இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. வீடுகளில் மதிய வேளைகளில் ஏசி, ஃபேன் இன்றி மக்களால் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே தான் இன்று அக்னி நட்சத்திரம் வேற தொடங்கி உள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் என்பது இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே தான் இன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சென்னையை எடுத்து கொண்டால் காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. அதன்பிறகு பிற்பகலில் சென்னையில் வெயில் குறைய தொடங்கியது. காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்தன.
அதன்பிறகு மாலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதற்கிடையே தான் பூந்தமல்லியில் உள்ள காந்தி நகர் விளையாட்டு மைதானத்தில் இன்று கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான இளைஞர்கள் தங்களின் அணி சார்பில் போட்டியில் பங்கேற்றனர். மேலும் போட்டியை பார்க்கவும் நிறைய பேர் திரண்டு இருந்தனர். இதற்கிடையே தான் மாலையில் திடீரென்று சூறைக்காற்று வீசியது. இந்த காற்றின் காரணமாக மைதானத்தில் இருந்து புழுதி மேலெழும்பி பறக்க தொடங்கியது. புழுதிப்புயல் போல் மைதானம் காட்சியளித்தது.
இதனால் கிரிக்கெட் விளையாடியவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் சூறைக்காற்றுக்கு நடுவே புழுதி பறந்த மைதானத்தில் தங்களின் முகத்தை முடிக்கொண்டு நின்றனர். இந்த புழுதிப்புயல் சில நொடிகள் வரை நீடித்தது. அதன்பிறகு மைதானம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து இளைஞர்கள் மீண்டும் விளையாட்டை தொடங்கினர்.
அதேபோல் பூந்தமல்லியில் தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தின் மேற்கூரைகள் இன்றைய சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்டன. திரையரங்கின் முன்பகுதி சரிந்து விழுந்துள்ளது. யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications