அரசியல், நிர்வாகம், அணுகுமுறைகளில் பண்புமாற்றங்களை உருவாக்கி வரும் திமுக ஆட்சி... தி.வி.க. பாராட்டு
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் திமுக ஆட்சியில் அதிகாரம், அரசியல், நிர்வாகம் மற்றும் அணுகுமுறை ஆகியவற்றில் பண்புமாற்றங்கள் உருவாகி உள்ளன என்று திராவிடர் விடுதலை கழகம் பாராட்டி உள்ளது.
திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அதிகாரம்,அரசியல், நிர்வாகம், அணுகுமுறை ஆகியவற்றில் பண்பு மாற்றங்களை உருவாக்கி வருகிறது. ஆட்சி மாற்றம் என்றாலே ஆளும் கட்சியினர் அதிகாரத்தை தங்களுக்காகவும் தங்கள் கட்சிகாரர்களுக்காகவும் பயன்படுத்துவதற்கும், சுரண்டுவதற்குமான ஒரு வாய்ப்பு என்பதுதான் தமிழக பொதுமக்கள் புத்தியில் படிந்துபோன கருத்தாக இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் என்பது சொகுசு வாழ்க்கைக்கு அல்ல, சுயநலத்திற்கு அல்ல மக்களுக்கான கடுமையான உழைப்பு அதில் அடங்கி இருக்கிறது. மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. மக்கள் அரசியல் என்பதே அதிகார மாற்றத்திற்கான அடித்தளம், என்ற சிந்தனையை தனது செயல்பாடுகள் வழியாக திமுக ஆட்சி நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.

நிர்வாகதுறையில் மாற்றம்
நிர்வாகத் துறையிலும் பண்பு மாற்றம் ஒன்று இப்போது நிகழ்ந்து வருகிறது. அதிகாரக் கட்டமைப்பு முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் முதலமைச்சர்களாக வருபவர்கள் உருவாக்குகிற அதிகாரக் கட்டமைப்பு எப்படி இருந்தது ? அதிகாரிகள் தங்கள் நம்பிக்கைக்குறியவர்களாக இருக்க வேண்டும். மற்றொன்று தாங்கள் பிறப்பிக்கின்ற அறிவுறுத்தல்களை, செயல்படுத்தக்கூடியவர்களாக, எதிர்ப்பு தெரிவிக்காதவர்களாக இருக்க வேண்டும். அதேசமயம் இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் வேகம் காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.

முதல்வரின் அதிகார கட்டமைப்பு
ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியிருக்கிற அதிகார கட்டமைப்பு, ஊழல் கரை படியாத நேர்மையான தகுதியான அதிகாரிகளின் கட்டமைப்பாக இன்றைக்கு உருப்பெற்று இருக்கிறது. இவர்கள் ஏற்கெனவே தங்கள் செயல்பாடுகளின் வழியாக மக்கள் மன்றத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். எனவே இந்த அதிகார பயணத்தில் வழி தவறி போனால் மக்கள் நெருக்கடிகளை உருவாக்கும் என்பதால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அதிகார கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்.

தீவிரமாக செயல்படும் அமைச்சர்கள்
நிர்வாகத்தில் உருவாக்கியிருக்கிற பண்பு மாற்றம். நிர்வாகம் எப்படி முடுக்கி விடப்பட வேண்டும் ? எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ? நிர்வாகத்திற்கு பொறுப்பு கூறல் வேண்டும், ஆகிய மூன்று அனுகுமுறைகளைக் கொண்டு நிர்வாகக் கட்டமைப்புகள் வேகம் வேகமாக மாற்றியமைக்கப்படுகின்றன. அமைச்சர்கள் அரசியல் பேசாமல் தங்கள் துறை நிர்வாகங்களை செயல்படுத்துவதிலும், தங்கள் துறை தொடர்பான செயல்பாடுகளில் மட்டுமே தீவிரம் காட்டி பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கிறார்கள்.

முடிவு எடுத்தலில் மாற்றம்
மற்றொன்று அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கிற மாற்றம். ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். என்று அனுகுமுறையிலும் பண்பு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது திமுக ஆட்சி. கடந்த காலங்களில் இது காணப்படாத அனுகுமுறை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் சரி, ஊரடங்கை அமுல்படுத்துவதிலும் சரி, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதா, வேண்டாமா என்பதிலும் சரி, துறை சார்ந்தவர்களையும், அரசியல் கட்சி சார்ந்தவர்களையும், கல்வியாளர்களையும், மருத்துவர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கின்ற அனுகுமுறையிலும் மிகப்பெரிய பண்பு மாற்றத்தை இந்த ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

மக்கள் நலன்
கட்சி அரசியலை விட மக்கள் அரசியலே பிரதானமானது என்பதை முன்னிறுத்தி செயல்படுகிற ஒரு போக்கு; எதையும் அரசியலாக்க விரும்பாமல் அந்த பயன் மக்களுக்கு வந்து சேர வேண்டும் என்று உரிமைக் கதவுகளை தட்டுகின்ற ஒரு அணுகுமுறை. உதாரணத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவதில் ஒன்றிய ஆட்சி பாகுபாடு காட்டியபோது தடுப்பூசிகளை தமிழகத்தில் நாங்கள் தயாரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி அதற்கான அனுமதிக்கு ஒன்றிய அரசிடம் உரிமைக் கதவுகளை முதலமைச்சர் தட்டினார். தமிழ்நாட்டை ஒரு வலிமையான கட்டமைப்புள்ள மாநிலமாக மாற்றுவதன் மூலமும், செயல்பாடுகளின் மூலம் மக்களது நம்பிக்கைகளை பெறுவதன் வழியாகவும் தமிழ்நாட்டை வலிமையான தமிழ்நாடாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய ஆட்சியாக மாற்றுவதின் வழியாக ஒன்றிய ஆட்சி இந்த மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டிய சூழலை, இந்த புதிய அனுகுமுறைகள் உருவாக்கி இருக்கின்றன.

காவல்துறையின் அணுகுமுறை
காவல் துறையின் அணுகுமுறையிலும் இப்போது மாற்றங்களை பார்க்கிறோம். சாத்தான்குளத்தில் ஊரடங்கு அணுகுமுறையை மீறியதற்காகவே, தந்தையும், மகனும் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள் கடந்த கால ஆட்சியில். இப்போது காவல்துறையிடம் ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் வரம்பு மீறி பேசுகிறார்கள். சட்டையை கழற்றுவேன் என்று மிரட்டுகிறார்கள். காவல்துறை எதிர்வினையாற்றாமல் அவர்கள் பேசுவதை அப்படியே காணொளியாக பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை மக்களின் நண்பனாகவே செயல்படும் என்ற பண்பு மாற்றத்தையும் காவல்துறை அணுகுமுறையில் உருவாக்கியிருப்பதை நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

பண்புமாற்றம் தொடர வேண்டும்
இப்படி ஏராளமாக நாம் பட்டியலிட முடியும். இவைகளை நாம் கூறுவது, தமிழ்நாட்டு முதல்வரை புகழ்வதற்கோ, திமுகவை பாராட்ட வேண்டும் என்பதற்கோ அல்ல. பெரியாரிஸ்டுகளாகிய நாம் எந்த பதவிக்கும் அல்லது சுயநலத்திற்கும் ஆட்சியாளர்களின் கதவை ஒருபோதும் தட்டப்போவதில்லை. மாறாக பெரியார் உருவாக்கித் தந்த திராவிடர் இனக் கோட்பாடும், அண்ணாவும், கலைஞரும் உருவாக்கிய திராவிட அரசியலும் அடித்தள மக்களுக்கான தத்துவம், அரசியல் என்பதை செயல்பாடுகளால் இந்த ஆட்சி நிரூபித்துக் காட்டுவதன் வழியாக அந்தக் கொள்கைகளுக்கு வலிமை சேர்த்து திராவிடர் இயக்கத்திற்கும் பெருமை சேர்க்கிறது என்பதன் காரணமாகவே நாம் இவற்றை பாராட்டி மகிழ்கிறோம். அதுமட்டுமின்றி திராவிட அரசியல் தான் தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டது என்று குற்றச்சாட்டுகளை சுமத்தி திரிகின்ற சில குழுக்களும், இயக்கங்களும் இன்றைக்கு வாய்மூடி மௌனம் சாதிக்கின்ற நிலையை 30 நாள் திமுக ஆட்சி உருவாக்கியிருக்கிறதை பார்க்கும்போதும், நாம் இந்த ஆட்சியை பாராட்ட வேண்டும், பாராட்டி மகிழ வேண்டும் என்று கருதுகிறோம். இந்தப் பணிகள் இதே வழியில் தொடர வேண்டும் என்பதே நமது விருப்பம் ஆகும். விமர்சனங்கள் என்று வரும்போது அவற்றை துணிவுடன்
-
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE












Click it and Unblock the Notifications