தமிழக அரசு சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்துவது இந்துத்துவா மாடல்: விடுதலை ராசேந்திரன் கண்டனம்
சென்னை: தமிழக அரசு சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்துவது திராவிட மாடல் அல்ல- இந்துத்துவா மாடல் என்று திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. ராசேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மயிலாப்பூர் கோயிலுக்கு சொந்தமான ஒரு மண்டபத்தில் மகா சிவராத்திரி விழாவை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர்.
மகா சிவராத்திரியன்று கண் விழிக்க வேண்டும் என்கிற மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி சுமார் 40,000 பேரைக் கூட்டி மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆன்மீக பிரச்சாரம், ஆன்மீக பட்டிமன்றம், ஆன்மீக இசை என இரவு முழுவதும் ஆன்மீகத்தை மக்களிடம் பரப்பப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக திமுக அரசுதான் இந்த பணியை செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மாடல் அல்ல
அறநிலையத்துறையின் பணி என்பது கோயில்களை பராமரிப்பது, கோயில்களில் நடக்கும் சடங்குகள், கும்பாபிஷேகங்களை முறையாக கண்காணித்து அதற்கான ஏற்பாடுகளை செய்துத் தருவது, கோயில் நிலங்களை மீட்டெடுப்பது போன்றவைதான். இதனை மிகவும் சிறப்பாக அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். ஆனால், மக்களைத் திரட்டி ஆன்மீகம் என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்வது அறநிலையத்துறையின் பணியல்ல. அது திராவிட மாடலும் அல்ல.

குழி தோண்டி புதைப்பது
உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை, 'திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, 'தேர்தல் வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக உயர்த்திவிட்டது, அரசியலில் அவர் மிகப்பெரிய பங்கை ஆற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது' என தலையங்கம் தீட்டியுள்ளது. மக்களிடம் சென்று கல்வி, மருத்துவத்தை வழங்குவது, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதுதான் திராவிட மாடல். ஆனால், மக்களிடம் மதப்பிரச்சாரம் செய்வதுதான் திராவிட மாடல் என சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் செய்வது தமிழ்நாடு அரசு கட்டிக்காத்து வளர்த்து வரும் அடிப்படை கொள்கையை குழிதோண்டி புதைக்கும் ஆபத்தான போக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மயிலாப்பூர் ஆன்மீக நகரமா?
இதுவரை எந்த அறநிலையத் துறையும் செய்யாத வேலையை இப்போது ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. உத்தர பிரதேசத்தில் ராமன் பிறந்ததாக சொல்லப்படும் அயோத்தியை கோயில் நகரமாக, புனித நகரமாக இந்துத்துவ பாஜக அரசு அறிவிக்கிறது. ஆனால், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மயிலாப்பூரை ஆன்மீக நகரமாக மாற்றப்போகிறேன் என்கிறார். அயோத்தியிலாவது ராமன் பிறந்தான் என்று கூறுகிறார்கள்? மயிலாப்பூரில் யார் பிறந்தார்? அதனை ஆன்மீக நகரமாக மாற்றுவதற்கு. சென்னையிலுள்ள மற்ற தொகுதிகளைக் காட்டிலும் மயிலாப்பூர் மட்டும் ஏன் ஆன்மீக நகரமாக சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிகிறது. வண்ணாரப் பேட்டையோ, ராயபுரமோ ஆன்மீக நகரமாக முடியாதா?

திமுக ஆட்சிக்கு எதிரானது
திராவிட மாடல் ஆட்சியை குழிதோண்டி புதைப்பதற்கெனவே சபதம் எடுத்துக்கொண்டவர்கள் வாழும் பகுதிதான் ஆன்மீக பகுதி, அவர்களை மகிழ்விப்பதுதான் எனது கடமை என ஒரு சட்டமன்ற உறுப்பினர் புறப்படுகிறார். அவருக்கு துணையாக மயிலாப்பூரை ஆன்மீக நகரமாக மாற்றுவதன் ஒரு பகுதியாக மக்களை திரட்டி மதப்பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு. இது திராவிடன் மாடல் ஆட்சியை குழிதோண்டி புதைக்கும் செயலாகும். அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்த கொள்கையில் ஓட்டை போடுகிற மிகப்பெரிய ஆபத்தாகும். உண்மைகள் கசக்கும் என்று சொன்னாலும் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை. தமிழ்நாடு முதலமைச்சர் கட்டாயம் இதில் தலையிட வேண்டும். திமுகவில் லட்சக்கணக்கான சிந்தனையாளர்கள், திராவிட இயக்க கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் இன்னமும் அமைச்சர்களாக, பொறுப்பாளர்களாக, உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் சேகர்பாபு புரிந்துகொள்ள வேண்டும் என பணிவோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு விடுதலை ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

விசிக எதிர்ப்பு
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக அரசின் மகாசிவராத்திரி விழா ஏற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு இது தொடர்பாக கூறுகையில், ஆன்மீகப் பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானது. தமிழக முதல்வர் இச்செயல் திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என கூறியுள்ளார்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications