8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுமா.. ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி பதில்
8 வழிச்சாலையில் முதல்வரின் கருத்தை துணை முதல்வர் ஆமோதித்து பதிலளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மக்கள் நலனுக்காக 8 வழிசாலை திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று முதல்வர் கூறிய கருத்துக்கு துணை முதல்வர் ஆதரவு தெரிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வருடம், 8 வழிச்சாலை திட்டம் கொண்டுவந்தபோது தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் கிளம்பின. இதையடுத்து இந்த திட்டம் சம்பந்தமான அடுத்தக்கட்ட வேலைகள் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

நாட்டு நலன்
அதற்கு முதல்வர் பதிலளித்தபோது, "புதிய சாலைகள் அமைப்பது மக்களின் நன்மைக்காக செய்யப்படுவது. விபத்துக்கள் தவிர்க்கப்படும். எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் 100 சதவீதத்தில் வெறும் 7 சதவீத மக்கள்தான் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு சொல்கிறார்கள். நாட்டு நலனுக்காக அவர்கள் தங்கள் நிலங்களை வழங்க முன்வரவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

பேட்டி
முதல்வரின் இந்த கருத்து பல்வேறு தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லியில் அமித்ஷா அளிக்கும் விருந்தில், கலந்து கொள்ள துணை முதல்வர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:

புதிய அமைச்சரவை
"பாஜகதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல தீர்ப்பை மக்கள் மற்றொரு முறை வழங்கியுள்ளனர். இதனைதான் கருத்து கணிப்புகள் வெளிப்படுத்தி உள்ளன. பாஜவின் புதிய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து, 23-ம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும்" என்றார்.

விவசாயிகள் அதிருப்தி
பின்னர், தேர்தலுக்கு முன்பு 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்படும் என்று சொன்னீர்கள், தேர்தல் முடிந்த பின்பு, அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளாரே, இதை பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓபிஎஸ், "முதல்வர்தான் உறுதியான, தெளிவான விளக்கம் அளித்து விட்டாரே" என்று பதிலளித்தார். முதல்வரின் கருத்தை துணை முதல்வர் ஆமோதித்தபடி பதில் சொல்லி உள்ளது விவசாயிகளிடம் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications