தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் அரசு பேருந்துகளில் இ டிக்கெட் அறிமுகம்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்!
சென்னை: தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் இ டிக்கெட் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்கும் வழக்கமான பயணச்சீட்டிற்கு பதிலாக இ டிக்கெட் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் ஜி பே, கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் மூலம் பேருந்துகளில் டிக்கெட் பெறலாம். மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.

புதிய ஸ்மார்ட் கார்டு
புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் வரை மாணவ மாணவிகளுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டு இருந்த பழைய ஸ்மார்ட் கார்டு அட்டைகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம். பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிக்கல்
பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படும். பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் அதிகளவில் விடுப்பில் இருப்பதால்தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்விற்கு பின்னர் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளார்கள்.

ஓய்வூதிய பலன்கள்
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வூதிய பலன்களை கொடுப்பதில் தாமதம் செய்ததால்தான் தற்போது வரை இந்த தாமதம் நீடித்து வருகிறது. போக்குவரத்து துறை ரூ 43000 கோடி கடனில் இருக்கிறது. இது மெல்ல மெல்ல சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிர்பயா திட்டம்
போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் பதவியேற்றதிலிருந்து பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், பயணிகள் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின் கீழ் நிறைய விஷயங்களை செய்து வருவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம், அவசர அழைப்பு பொத்தான் பொருத்தும் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளார். முதற்கட்டமாக சென்னையில் 500 பேருந்துகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications