விஜயகாந்த் உடலை வட்டமிட்ட கருடன்! ஆண்டாள் அடியேனை நேரில் வந்து சொர்க்கத்திற்கு அழைத்த பெருமாள்!
சென்னை: கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்களால் போற்றப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக சொல்லப்பட்டதுமே தேமுதிக தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தனர்.

இதையடுத்து அவரது இறப்பை அறிந்ததும் பலர் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீடு, கட்சி அலுவலகத்தில் சாரை சாரையாக குழுமினர். சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து பொதுமக்கள், தொண்டர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயகாந்திற்கு பல்வேறு ரசிகர்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்தின் உடல் அடுத்த நாளான 29 ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பேருந்துகள், லாரிகள், டெம்போக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருடன் தொண்டர்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கோயம்பேடே திணறியது. பின்னர் அரசுடன் ஆலோசனை நடத்தி விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலு்தினர். இதையடுத்து அவருடைய இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டது.
பூந்தேரில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு வழிநெடுகிலும் கூட்டம் கூட்டமாக நின்றிருந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேம்பாலங்கள், உயர்ந்த கட்டடங்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நின்று கொண்டு பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு பிரேமலதா, மகன்கள் ஆகியோர் கை கூப்பி நன்றி தெரிவித்தனர்.
வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் கண்ணீல் மல்க நின்றுக் கொண்டு இறுதியாக பயணித்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில்தான் அவருடைய உடல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடக்கும் போது வானில் இரு கருடன்கள் வட்டமிட்டன. அவருடைய உடலுக்கு 3 முறை வட்டமிட்ட கருடனை பார்த்து அங்கிருந்தோர் மெய்சிலிர்த்தனர். உடனே பிரேமலதா உள்ளிட்டோர் கருடனை கும்பிட்டனர்.
கருடன் வட்டமிடுவது ஏன்? பொதுவாக கருடன் கும்பாபிஷேகம் மற்றும் ஆன்மிகவாதிகளின் மரணங்களின் போது வட்டமிடும். இது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வாகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு விஜயகாந்துக்கு நடந்துள்ளதை வைத்து பார்க்கும் போது அவர் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
கள்ளழகர் படத்தில் நடித்த விஜயகாந்துக்கு ஆண்டாள் என்றால் மிகவும் பிடிக்கும். மதுரைக்கு சென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் தங்க முலாம் பூச தங்கத்தை அன்பளிப்பாக விஜயகாந்த் கொடுத்துள்ளார். அத்துடன் விஜயகாந்தின் கல்லூரிக்கு ஆண்டாள் அழகர் என்றுதான் பெயர்.
மார்கழி மாதத்தில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். தற்போது விஜயகாந்தை கருடன் வட்டமிட்டதால் பெருமாளே நேரில் வந்து விஜயகாந்தை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வதாகவே கருதப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications