ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. நளினியின் விடுதலை மனு! விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் அமைச்சரவை முடிவின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

முன்கூட்டிய விடுதலை மனு
இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை. இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நளினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ரவிச்சந்திரனும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அமைச்சரவைக்கு அதிகாரம்
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இந்திய அரசியல் சாசனம் 161வது பிரிவின் கீழ் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது.

பட்டியலிட உத்தரவு
மேலும் அமைச்சரவை பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் எனவும், அந்த பரிந்துரை மீது 42 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தான் நளினி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இதுவரை எண்ணிடப்படாமல் இருந்த இந்த மனுவுக்கு எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

தள்ளிவைப்பு
மேலும் முன்கூட்டிய விடுதலை கோரி இதே வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தரப்பில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகள் விடுதலை செய்துள்ளதை போல 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது. ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications