‛ஜாக்பாட்’.. மாதம் ரூ.9,250 வருமானம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. POMIS Scheme-ல் இணைவது எப்படி?
சென்னை: அஞ்சலக சேமிப்பு திட்டம் மூலம் மாதம் ரூ.9,250 வருமானம் கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுவது எப்படி என்பது பற்றிய விபரம் வருமாறு:
தபால் நிலையங்களில் (அஞ்சலகம்) பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மக்கள் தற்போது வங்கிகளை போல் தபால் நிலைய திட்டங்களில் இணைந்து பணத்தை சேமித்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் தபால் நிலைய திட்டங்கள் நேரடியாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது தான். அதோடு வட்டி விகிதம் அதிகமாக இருப்பதும், சேமிக்கும் பணத்தின் மீதான அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதும் தான் காரணம்.
மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டம் என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் ஆண்டுதோறும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கான வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் அஞ்சலக சேமிப்பு திட்டம் ஒன்றில் மக்கள் இணைவதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் ரூ.5,550 முதல் அதிகபட்சமாக ரூ.9,250 வரை பெற முடியும்.
இந்த பயன் கிடைக்க வேண்டும் என்றால் மக்கள் பிஓஎம்ஐஎஸ் எனும் தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் (Post Office Montly Income Scheme or POMIS) இணைய வேண்டும். இது 5 ஆண்டு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் 2 வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பொறுத்தமட்டில் சிங்கிள் அக்கவுண்ட் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் என்ற 2 வகைகள் உள்ளன. ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையில் அதிகபட்சமாக 3 பேர் இணைய முடியும்.
சிங்கிள் அக்கவுண்ட் திட்டம் என்றால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையும், ஜாயிண்ட் அக்கவுண்ட் திட்டம் என்றால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் 5 ஆண்டுகளில் நாம் முதலீடு செய்து சேமிக்கலாம். இந்த சேமிப்பு திட்டத்துக்கு தற்போது 7.4 சதவீதம் ஆண்டு வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்த வட்டித்தொகையை 5 ஆண்டுக்கு பிறகு பயனாளர்கள் ஒவ்வொரு மாதமும் பெற முடியும்.
அதன்படி ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் ஒருவர் 5 ஆண்டில் ரூ.15 லட்சத்தை சேமித்தால் செய்தால் அவருக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.1.11 லட்சம் வட்டியாக கிடைக்கும். இதனை 12 மாதங்களுக்கு பிரித்து பார்த்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 கிடைக்கும். இதனை அவர்கள் மாதந்தோறும் எடுத்து கொள்ள முடியும்.
மாறாக சிங்கிள் அக்கவுண்ட் முறையில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.66,600 வட்டியாக கிடைக்கும். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.5,550யை பெற முடியும். ஒருவேளை இந்த வட்டித்தொகையை மாதந்தோறும் நாம் எடுக்காத பட்சத்தில் அது அசல் தொகையுடன் சேரும். அதுமட்டுமின்றி அசல் தொகையுடன் சேரும் வட்டி தொகைக்கும் கூட வட்டி கிடைக்கும். இதனால் இந்த திட்டம் என்பது மக்களுக்கு வரப்பிரசாதமாம் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் அருகே உள்ள அஞ்சலகங்ஙகளுக்கு ஆதார்கார்டு, பான்கார்டுகளுடன் சென்று பிஓஎம்ஐஎஸ் திட்டத்தை இணைய கூறி அதற்கான விண்ணப்பத்தை வாங்கி நிரப்பி வழங்க வேண்டும்.எடுத்து செல்ல வேண்டும். அதன்பிறகு நிர்ணயிக்கப்பட்ட தொகையை பணமாகவோ, காசோலை வழியாகவோ வழங்கி டெபாசிட்டை தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க, உங்களிடம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருக்க வேண்டும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications