"இபி பில்" இந்த மாசம் கட்டிட்டீங்களா.. இவங்களுக்கு "கரண்ட் பில்"லில் செக் வைத்த மின்வாரியம்.. உத்தரவு
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பான லிஸ்ட்டையும் வெளியிட்டுள்ளது.. என்ன காரணம்?
மின்சார வாரியத்தில் சமீபகாலமாகவே புகார்கள் கிளம்பி வருகின்றன.. மின்வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
லஞ்சம்: நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம், சிலர் லஞ்சம் வாங்கி சிக்குவது அதிகரித்து வருகிறது.. இவர்கள் மீது துறை வாரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், லஞ்சத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.. அதனால்தான், லஞ்சம் பெறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மின்வாரியம் சமீபத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது..

குறிப்பாக, சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் வார்னிங் தந்திருந்தது.
விஜிலென்ஸ்: அதுமட்டுமல்ல, ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் வேண்டும்" என்றும் சற்று காட்டமாகவே எச்சரித்திருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம், மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.. அதில், "மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும். நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
மாவட்டங்கள்: குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பிறகு, அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை பொருத்தும் பணிகளும் வேகம் எடுத்துள்ளன.
இதனிடையே, மாநிலம் முழுமையிலும், பழுதடைந்த மீட்டர்கள் எவ்வளவு? மின் கட்டணம் செலுத்தாதவர்கள் எத்தனை பேர் என்ற தகவலும் தனித்தனியாக வெளியாகி உள்ளது. அந்தவகையில், மாநிலம் முழுதும் ஒரு முனைப்பிரிவில், 1.74 லட்சம் மீட்டர்களிலும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களிலும், மும்முனை பிரிவில், 32,000 மீட்டர்களிலும் குறைபாடுகள் உள்ளதாக மின் வாரியம் கண்டறிந்துள்ளது..
அதிகப்பட்ச மீட்டர்கள்: இதில், அதிகப்பட்சமாக மீட்டர்கள் பழுதாகி இருப்பது செங்கல்பட்டு மாவட்டம்தானாம்.. இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 13,451 மீட்டர்கள் பழுதாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கிருஷ்ணகிரியில் 13,351 மீட்டர்களும், இதற்கு அடுத்தபடியாக சென்னை தெற்கில் 13,125 மீட்டர்களும் பழுதடைந்து உள்ளன.
நாகை மாவட்டத்தில் 10,654, திருச்சி நகரில் 10,212, சென்னை மேற்கில் 9,365, நெல்லையில் 9,253, சென்னை வடக்கில், 8,904, தஞ்சையில் 8,557 மீட்டர்களும் பழுதடைந்து உள்ளதாக மின்வாரியம் லிஸ்ட் போட்டு கூறியுள்ளது.
கரண்ட்பில்: அதேபோல, இந்த மாதம் 12ம் தேதி வரை 59,565 பேர் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளார்களாம்.. இவர்கள் அனைவருமே, தங்களின் அவகாசத்தை தாண்டி அதாவது 10 நாட்களுக்கும் மேலாக, கரண்ட் பில் கட்டாமல் இருக்கிறார்களாம்..
இந்த மின் கட்டணம் மட்டும் 47.26 கோடியாகும்.. இவர்கள் அனைவருமே உடனடியாக பில் கட்ட வேண்டும் என்றும், அவர்களின் இணைப்புகளில் மின் வினியோகத்தை துண்டிப்பதுடன், கட்டணத்தை விரைந்து வசூலிக்குமாறும் மின் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications