இந்த பக்கம் வாங்க.. அந்த பக்கம் கரண்ட் ஷாக் அடிக்குது.. மேற்கு மாம்பலத்தில் மின் ஊழியர் வார்னிங்!
சென்னை: மேற்கு மாம்பலம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள சாலையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளதால் மின் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு கருதி ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்.
Recommended Video
சென்னையில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக மாம்பலம், கிண்டி, தி நகர் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீர் தேசமாக காட்சியளிக்கிறது.
சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சேங்கியுள்ளதால் மேடு, பள்ளம் தெரியாத அளவுக்கு உள்ளது. தண்ணீரில் நீந்தி வெளியே வர அஞ்சி பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

வடதமிழகம்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சிக்கே இந்த நிலை என்றால் இன்னும் வடதமிழகத்தை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை எப்படி வெளுத்து வாங்குமோ என்ற அச்சம் இப்போதே சென்னைவாசிகளை தொற்றிக் கொண்டது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

மக்கள் வேதனை
இதனால் மின்சாதன பொருட்கள் பழுதாகியுள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாலும் முழங்கால் அளவுக்கு சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும் சென்னையின் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் பூச்சி உள்ளிட்ட ஊர்வனவைகளுக்கு அஞ்சி வாழும் சூழல் எழுந்துள்ளது.

சென்னையில்
இந்த கனமழை சென்னையில் இரு தினங்களுக்கு மேலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் தண்ணீரை ராட்சத மோட்டார் வைத்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

மின்வாரிய
மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் சாலையில் ஒரு மின்வாரிய பெட்டியின் அடியில் இருந்து புகை வருகிறது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி மின் வாரிய ஊழியர்கள் ஒருவர் எதிர்திசையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்ல வேண்டாம் என வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகிறார். இதை சரி செய்யவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications