கரண்ட் பில் ஓவரா வருதா.. "புழுங்கிய" மக்கள்..தமிழ்நாடு அரசு அதிரடி.. மின்வாரியத்துக்கு பறந்த உத்தரவு
சென்னை: தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
சென்னை, புறநகர் பகுதிகளில் சில நாட்களாகவே மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில், குடியிருப்பு, அலுவலகம், தொழிற்சாலைகளில், அதிகளவில் மின் தேவை ஏற்பட்டுள்ளது
என்ன காரணம்: பல இடங்களில் மின்மாற்றியின் திறனை மேம்படுத்தாமல் இருப்பதாலும், மின்வெட்டு பிரச்னை அதிகரித்து வருகிறது. முந்தைய காலம்போல், மீண்டும் மின்வெட்டு ஆரம்பமாகி உள்ளது, திமுக அரசு மீதான விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகிறது.. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பி வருகின்றன.
ஆனால், மின்வாரிய ஊழியர்கள் சொல்லும்போது, "இரவு 10:00 மணிக்கு மேல், ஒரே நேரத்தில் ஏசி, ஃபேன் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்துவதால், மின்மாற்றியில் சுமை தாங்காமல் பழுது ஏற்படுகிறதாம்.. இதனால், இரவு நேரத்தில் 100 கே.வி., திறன் உடைய மின்மாற்றியில், ஒரே நேரத்தில் 370 கே.வி.,க்கு மேல் மின்சார பயன்பாடு அதிகரிக்கும்போது, மின்மாற்றி வெடிக்கிறது.. இதனால், பழுதான மின்மாற்றியை மாற்றவும், சில இடங்களில் மின் மாற்றியின் திறனை அதிகரிக்கவும் பணிகள் நடந்து வருகின்றன என்கிறார்கள்.

மின்சார தேவை: எனினும், தினசரி மின் தேவையானது, 18 ஆயிரம் மெகா வாட்டாக தற்போது உள்ளது. வீடுகளும், தொழில் நிறுவனங்களும் அதிகம் உள்ள சென்னையில், 'ஏசி' பயன்பாடுகளும் இதுவரை குறையவில்லை... குறிப்பாக இரவு 9:00 மணி முதல், 10:30 மணி வரை ஏசி பயன்பாடுகள் அதிகமாகவே உள்ளது என்கிறார்கள்.. தினமும் சராசரியாக, 3,000 மொ வாட்டாக உள்ள சென்னை மின் தேவையானது, கடந்த 14ம் தேதி, எப்போதும் இல்லாத அளவாக, 4,300 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளதாம்..
சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின் பயன்பாடு அதிகம் இருக்கவே செய்கிறது.. இதனால் இரவில் மின் வினியோக பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகி, மின் தடையும் ஏற்பட்டுவிடுகின்றன.. இதன்காரணமாக, பொதுமக்கள் இரவு நேரங்களில் சரியாக தூங்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பற்றாக்குறை: இரவு நேரத்தில் ஊழியர்கள் அவ்வளவாக இருப்பதில்லையாம்.. ஊழியர்களின் பற்றாக்குறையால் இரவில் ஏற்படும் பழுதை சரிசெய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஊழியர்களின் பற்றாக்குறையின் காரணத்தினால் இரவில் பழுது சரி பார்க்க முடியாமல், மறுநாள் காலையில் தான் மின்தடை சரி பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் தமிழக அரசு அதிரடியை கையில் எடுத்துள்ளது..
அதன்படி, இரவு, 9:00 மணி முதல் அதிகாலை, 2:00 மணி வரை பிரிவு அலுவலகங்களில் ஊழியர்கள் இருக்க வேண்டும் என்றும், காலையில் அலுவலகத்திற்கு சற்று தாமதமாக வந்தாலும் கூட பரவாயில்லை என்றும் மின் வாரியம்அறிவுறுத்தியிருக்கிறது.. பிரிவு அலுவலக பொறியாளர்களுக்கு இதுகுறித்த சுற்றறிக்கையும் விடுத்துள்ளது. மின்வாரியத்திதன் இந்த நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு சற்று நிம்மதியையையும், பெருத்த நம்பிக்கையையும் தந்து வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது... அந்த அறிக்கையில் உள்ளதாவது: "மின் கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக தன்னிச்சையான, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க மற்றும் உரிய காலத்தில் உண்மையான கணக்கெடுப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய, சோதனை மின்அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்: இதைத் தொடர்ந்து, கள ஆய்வு செய்யும் அலுவலர்கள், ஆய்வு செய்யப்படும் பிரிவில் களஆய்வு நாளின் கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில் குறைந்த பட்சம் 10 சதவீத மின் இணைப்புகளை தேர்ந்தெடுத்து சோதனை மின் அளவீடு எடுப்பதன் மூலம், மின்கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி அனைத்து சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும்" என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஒருபக்கம் கரண்ட் பில்லில் ஒழுங்குமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்தரவும், மறுபக்கம், மின்தடைகளை சரி செய்ய மின்ஊழியர்களின் வேலைநேரமும் என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications