Ebay-ல் விடுதலைப் புலிகளின் சீருடையில் பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள்- தமிழர்கள் கொந்தளிப்பு!
சென்னை: Ebay எனப்படும் ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளில் பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள் விற்பனை செய்யப்படுவது தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம், உலக அளவிலான ஆயுதக் குழுக்களில் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் கடைபிடித்த ஒன்று என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.
அமெரிக்கா மீதான இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் உலக நாடுகளின் அடிப்படை கோட்பாடுகள் அடியோடு மாறிப் போயின. தேசிய இனத்துக்கான விடுதலைப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் கூட பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இதனால் உலக நாடுகள் பலவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தன. அங்கிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னடைவும் தொடங்கிவிட்டது.

2009 இறுதி யுத்தம்
2009-ம் ஆண்டு இலங்கை அரசுடனான இறுதி யுத்தத்தின் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களது ஆயுதங்களை மவுனிக்கச் செய்தனர். அதன்பின்னர் விடுதலைப் புலிகளின் இயக்கம் செயல்படவும் இல்லை.

புலிகள் சீருடை
விடுதலைப் புலிகள் இயக்கம் முப்படைகளையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு படையணிக்கும் தனித்தனி சீருடைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அமைதிப் பேச்சுவார்த்தை காலம் தவிர பொதுவாக தலைவர் பிரபாகரன் முதல் சாதாரண இயக்க உறுப்பினர் வரை புலிகளின் சீருடைகளில்தான் வலம் வருவர். புலிகளின் சீருடையை புனிதப் பொருளாகவே அவர்கள் கருதினர்.

பெண்களின் நீச்சல் உடைகள்
அத்தகைய விடுதலைப் புலிகளின் முப்படைகளின் சீருடைகளில் தற்போது பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள் வடிவமைக்கப்பட்டு Ebay எனப்படும் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது தமிழர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. அதுவும் Sri Lankan LTTE Sea Tigers Cactus Camouflage One-Piece Swimsuit என்ற பெயரிலேயே இந்த விற்பனையும் நடைபெற்று வருகிறது.

அவமதிப்பதா?
விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று இல்லாமல் போனாலும் உலகத் தமிழர்களின் மதிப்புக்குரிய அமைப்பாக இருக்கிறது. தமிழர்கள் நடத்திய விடுதலைப் போர்களில் விடுதலைப் புலிகள் இயக்கம் முதன்மையான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. அத்தகைய இயக்கத்தின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் நீச்சல் உள்ளாடைகளை உருவாக்கி இருப்பது வேதனைக்குரியது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications