தேர்தல் ஆணையம் மீது கொலை வழக்கு... ஹைகோர்ட் கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கொலை வழக்கு பதியலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தியதற்காக ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியது. தேர்தல் நேரத்தில் கொரோனா விதிமீறலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நேரத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்தியதால் கொரோனா மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்தது. இரண்டாம் அலையால் மக்கள் கொத்து கொத்தாக மடிய ஆரம்பித்துள்ளனர். இன்றைய கொரோனா பரவலின் அதீத பாதிப்புக்கு காரணம் சட்டசபைத் தேர்தலும் அரசியல்வாதிகளின் பிரசாரம்தான்.

2000ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம் என்று வழக்கு விசாரணை ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியானது. உயர் நீதிமன்றம் வாய்மொழியாக தெரித்ததை செய்தியாக வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறினார்.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம், நீதிமன்ற நடவடிக்கைகளின்போது மேற்கொள்ளப்படும் வாய்மொழி வழியான விசாரணைகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுகளை அல்லது தீர்ப்புகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஊடக நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியது.
தேர்தல் ஆணையத்தின் மீது கிரிமினல் குற்றத்திற்காக நடவடிக்கை கோரி போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன என்று மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறினார். இந்த சர்ச்சைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு நீதிமன்றம் இருக்கிறது. ஏதேனும் அற்பமான புகார்கள் வந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தது.
இதனிடையே தேர்தல் ஆணையம் மீது சென்னை உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தியதற்காக ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தலாம் என உயர்நீதிமன்றம் கூறியது. தேர்தல் நேரத்தில் கொரோனா விதிமீறலை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications