உதயசூரியனால் மறையும் மமக? கட்சி பதிவை ஏன் நீக்கக் கூடாது? ஜவாஹிருல்லா கட்சிக்கு பறந்த EC நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் 24 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி பதிவை ஏன் நீக்க கூடாது என தேர்தல் ஆணையம் அக்கட்சி தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கட்சிக்கு இரு எம்எல்ஏக்கள் இருந்தாலும், இருவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் பிரதான கட்சிகள் தவிர்த்து சிறிய சிறிய கட்சிகளும், லெட்டர் பேடு கட்சிகளும் இருக்கின்றன. ஆட்களே இல்லாவிட்டாலும் ஒருவரால் கட்சி ஆரம்பிக்க முடியும். அப்படி நம் நாட்டில் கட்சிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. தமிழகத்திலும் அப்படித்தான்.

இந்த நிலையில் பெயருக்கு கட்சியை ஆரம்பித்து விட்டு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

EC Notice to 24 Tamil Nadu Parties

தேர்தல் ஆணையம்

2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. எனவே, நாடு முழுவதும் இத்தகைய கட்சிகளை அடையாளம் காணும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

தமிழகக் கட்சிகள்

இதனடிப்படையில் 345 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் அது போன்று 24 அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த பட்டியல் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம், அப்பா அம்மா மக்கள் கழகம், தமிழ் மாநில கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி, வளமான தமிழகம் கட்சி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

மேலும், அனைத்திந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி, அனைத்திந்திய பெண்கள் ஜனநாயக சுதந்திர கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி, இண்டியன்ஸ் விக்டரி பார்ட்டி, மகாபாரத் மகாஜன் சபா, மக்கள் நீதிக்கட்சி - இந்தியா, மீனவர் மக்கள் முன்னணி, நல்வளர்ச்சிக் கழகம் தேசிய ஸ்தாபன காங்கிரஸ், தேசியவாத அறக்கட்டளை காங்கிரஸ் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜவாஹிருல்லா

இந்த கட்சிகள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி பட்டியலில் இருந்து நீக்கப்படும் என கூறுகின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஜவாஹிருல்லாவை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த கட்சி 2019 ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உதயசூரியன்

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியிலும், அதே கட்சியைச் சேர்ந்த அப்துல் சமது மணப்பாறையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால் இவர்கள் இருவரும் தனி சின்னத்தில் போட்டியிடாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜவாஹிருல்லாவும், அப்துல் சமது ஆகிய இருவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே சட்டமன்றத்தில் இருக்கின்றனர். அதனால் தான் அந்த கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மனிதநேய ஜனநாயக கட்சி

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த போது மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்னதாக 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகிய தேர்தல்களில் தனி சின்னத்தில் தான் போட்டியிட்டனர். அதற்குப் பிறகான தேர்தல்களில் அக்கட்சி அதிகாரப்பூர்வமாக போட்டியிடாததால் அந்த கட்சிக்கு நோட்டீஸ் பறந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+