லோக்சபா தேர்தலோடு தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம் தேதி இந்த இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் கவுண்டன் தொடங்கிவிட்டதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்து இருக்கிறது.

லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. இதனால் தமிழகம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 18 தொகுதி இடைதேர்தலால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க கூட வாய்ப்பு உள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ மறைவு காரணமாக இன்னும் 2 தொகுதிகள் காலியானது.
அதன்பின் ஓசூர் தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ணா ரெட்டி சிறைத்தண்டனை பெற்றதால், அவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தற்போது தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக இருக்கிறது. இதில் 18 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் இதற்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதோடு சேர்த்து காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது.
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்காது. 3 தொகுதி இடைத்தேர்தலுக்கு எதிராக வழக்குகள் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் நடக்காது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications