பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி.. இனி ஊடக விவாதங்களில் அனல் பறக்கும்
சென்னை: பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் எனச் சொல்லி டிரெண்டானவர் இவர்.

பொருளாதாரம் குறித்துப் பேசி வந்த ஆனந்த் சீனிவாசன்,சமீபத்தில் அரசியல் பக்கம் வந்தார். பாஜக அரசைக் கடுமையாகச் சாடி பேசிய ஆனந்த் சீனிவாசன் இந்தியா கூட்டணி நிச்சயம் லோக்சபா தேர்தலில் வெல்லும் எனக் கூறியுள்ளார். தொலைக்காட்சிகளில் ஊடக விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்று பேசி வந்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக புள்ளி விபரமாக கருத்துக்களை முன் வைத்து பேசுவார் ஆனந்த் சீனிவாசன். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications