வெறும் ரூ.2000 செலுத்தினால் ரூ.1லட்சம்.. விவசாயிகளுக்கு பொருளாதார நிபுணர் சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: வெறும் ரூ.2000 செலுத்தினால் ரூ.1லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் என்று விவசாயிகளுக்கு பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி சூப்பர் விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
குழந்தை போல் வளர்த்த பயிர்களை மண்ணோடு மண்ணாக அழித்துள்ளார் திருவாரூர் மாவட்ட விவசாயி ஒருவர்.. திடீர் கனமழையால் பயிர்கள் சேதடைந்த நிலையில், 10 ஏக்கர் நிலத்தை அறுவடை செய்யாமலே விவசாயி உழுதார்.இது தொடர்பாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பயிர் பாதுகாப்பு காப்பீடு குறித்து பொருளாதார நிபுணர் ராஜேஸ் கிருஷ்ணமூர்த்தி முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
பயிர் பாதுகாப்பு காப்பீடு: ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி எதிர்பாராத விஷயங்கள் நடக்குது. "பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ்" எடுத்து வச்சிருந்தா, இந்த மாதிரி இயற்கை சேதங்கள் மற்றும் மற்ற விஷயங்களால் வரும் சேதங்களுக்கு தகுந்த இழப்பீடு கிடைக்கும்.
என்னென்ன சேதங்களுக்கு இழப்பீடு கிடைக்கும்?:
1. இயற்கை சீற்றங்கள்.
2. விதைக்கும் போது, வானிலை மாற்றங்களால் ஏற்படும் சேதங்கள்.
3. பயிர் நன்றாக விளைந்திருக்கையில், பருவமழை பொய்த்தல் மற்றும் தவிர்க்க முடியாத இயற்கை மாறுதல்கள் மூலம் ஏற்படும் சேதங்கள்.
4. அறுவடை செய்த நாளில் இருந்து 14 நாட்களுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சேதங்கள்.
பிரீமியம் எவ்வளவு? : நீங்கள் எவ்வளவு காப்பீடு எடுக்கின்றீர்களோ, அதில் அதிகபட்சமாக 2% வரை. அதாவது, ₹1 லட்சத்திற்கு காப்பீடு எடுத்தால், பிரீமியம் வெறும் ₹2,000 மட்டுமே.

உங்களுக்கு தெரிந்த வட்டத்தில் யாராவது விவசாயிகள் இருந்தால், அவர்களை அருகிலுள்ள அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதாவது ஒன்றிற்குச் சென்று, பயிர் பாதுகாப்பு காப்பீடு எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால், இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை முழுவதுமாக தவிர்க்கலாம்.
அரசு வழங்கும் பயிர் காப்பீடு (Pradhan Mantri Fasal Bima Yojana) பற்றி தெரிந்துகொள்ள https://pmfby.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பாருங்கள்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications