டிரம்ப் பெரிய தவறை செய்துவிட்டார்.. இந்தியாவால் அமெரிக்காவிற்கு பெரிய சிக்கல்.. வல்லுநர் வார்னிங்!
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதித்திருக்கும் நிலையில், பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் இது குறித்து அமெரிக்காவிற்கு தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியா நம்முடன் நெருக்கமாக இருக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பில் அமெரிக்காவுடன் சேர்வதால், இந்தியா நீண்டகால பாதுகாப்பைப் பெறாது. இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியா தேவை. இந்தியா உலகில் சுதந்திரமான நிலைப்பாடு கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்ப் வரிகள் குறித்துச் செய்யும் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது,

இந்தியா சீனாவுடன் நெருக்கமாக விடக்கூடாது. நம்முடன் நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் டிரம்ப் அதற்கு எதிராக செயல்படுகிறார். அதை அனுமதிக்க கூடாது" என்று கூறினார்.
நான் இந்தியாவில் இருந்தபோது இந்தியா அமெரிக்கா நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு நல்ல பங்காளியாக இருக்கும் என்றேன். ஆனால் அப்படிப்பட்ட இந்தியாவை அமெரிக்கா பகைத்துக்கொள்வது சரியாக இருக்காது என்று கூறி உள்ளார்.
டிரம்ப் இந்தியா மோதல்
இந்தியாவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.. ரொம்ப ஆபத்தான முடிவு.. என்று ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்தது கவனம் பெற்றுள்ளது. டிரம்ப் இப்போது வரி விதிப்பு எச்சரிக்கைகளை விடும் நிலையில் ஜேபி மோர்கன் சேஸ் & கோ வார்னிங் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்குவதுடன், வாங்கப்பட்ட எண்ணெயின் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் கொல்லப்படும் மக்கள் குறித்து இந்தியர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்.. ரஷ்யாவிடம் இந்தியா குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கி அதை மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறது" என்று எச்சரித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சரிவை இருநாட்டு உறவு எட்டி உள்ளது.
இந்தியாவின் பல பொருட்களுக்கு 25% வரை வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவிற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஏப்ரம் 2 அன்று ட்ரம்ப் அறிவித்த 26% வரியை விட 1% குறைவாகும்.
ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், "இந்தியா நமது நண்பராக இருந்தாலும், அவர்களின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடுமையானவை. உலகிலேயே மிக உயர்ந்த வரிகளை விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் செயல்களைக் கண்டிக்கும் இந்த நேரத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ராணுவ தளவாடங்களை அதிகம் வாங்குவது நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 7 முதல் இந்தியா 25% வரி மற்றும் அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும்," என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications